சுவிசில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முடிவடைய இன்னும் 4 மணித்தியாலங்கள்

Google+ Pinterest LinkedIn Tumblr +
சுவிசில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முடிவடைய இன்னும் 4 மணித்தியாலங்கள்
திகதி: 24.01.2010 // தமிழீழம்
அலைகடலாய் அணி திரண்டு சுவிசில் சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பை அமோக வெற்றிபெறச்செய்வோம் என தமிழ் இளையோர் அமைப்பு – சுவிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அவ்வறிக்கையில் மேலும் தொவிக்கப்பட்டிருப்பதாவது:
அலைகடலாய் அணிதிரண்டு சுவிஸில் சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பை அமோக வெற்றிபெறச்செய்வோம். மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நிறைவடைவதற்கு இன்னும் 4 மணித்தியாலங்கள் உள்ளது.
35 000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் கனவும் தமிழ் மக்களின் ஆழ்மன விருப்பான தமிழீழக் கோரிக்கையை வெற்றியடையச்செய்து சர்வதேசத்திற்கு நாம் உணர்த்த வேண்டும். வெறும் 4 மணித்தியாலங்களே இருக்கின்ற நிலையிலும் சுவிஸ் மகள் வாக்குச்சாவடிகளை நோக்கி விரைந்து வந்து வாக்களித்து வரலாற்றுக்கடைமையை செய்வார்களென்ற அதீத நம்பிக்கையுடன் நாமும் சுவிஸ்நாட்டின் கண்காணிப்பாளர்களும் காத்திருக்கிறோம்.
மக்களே சுயமாக நீங்கள் பிரச்சாரம் செய்யுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் SMS, Telephone, Email போன்றவற்றை பயன்படுத்தி அறியப்படுத்துங்கள். மக்கள் சக்தியே மிகப்பெரும் சரித்திரத்தை படைக்கும.
நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு – சுவிஸ்

Share.

Comments are closed.