
சிவந்தன் அவர்கள் மாலை 6 மணியளவில் டோவரை அண்மிப்பார் என உதவியாளர்கள் தெரிவித்துள்ள போதிலும், அவரின் கால்களின் தசைகள் இறுகிய நிலை காணப்படுவதாகவும், சிவந்தனுக்கு தைரியம் கொடுப்பதற்காக தமிழின உணர்வாளர்களை வீதிக்கு வந்து அவருக்கு தெம்பூட்டுமாறு அழைக்கின்றனர்.
சிவந்தனை உற்சாகப்படுத்தவும், தமிழ் மக்கள் கோரிக்கைகளை வலுவாக முன்வைக்கவும் அவருடன் இணைந்து அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்கள் நடக்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
{ppgallery}news/sivanthan/progress{/ppgallery}
இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.