சிவந்தன் டோவரைச் சென்றடைந்துள்ளார் – 5:00 மணிக்கு பிரான்ஸ் கரையை அடைவார்

Google+ Pinterest LinkedIn Tumblr +

ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் பிரித்தானிய கடற்கரையான டோவரைச் சென்றடைந்துள்ளார்.
 
பிரித்தானிய நேரம் பிற்பகல் 3:15 இற்கு கப்பலில் ஏறும் அவர், மாலை 5:00 மணியளவில் பிரான்ஸ் கரையை சென்றடையவுள்ளார்.
 
பிரான்சின் கரையான கலையில் சிவந்தனை வரவேற்கவும், அவருடன் இணைந்து நடக்கவும் அங்குள்ள தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.
 
பரிஸ் ஊடாக ஜெனீவா செல்லவுள்ள சிவந்தன் பிரித்தானியாவைவிட பிரான்சில் அதிக தூரம் நடக்க வேண்டியிருப்பதால், சிவந்தனுக்கு உற்சாகமும், ஆதரவும் வழங்க பிரான்ஸ்வாழ் தமிழ் மக்கள் தயாராகுமாறு அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தன.
 
சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
 
சுவிற்சர்லாந்து ஜெனீவா முருகதாசன் திடலை (ஐ.நா மனித உரிமைகள் சபை முன்றலை) எதிர்வரும் 6ஆம் நாள் சிவந்தன் சென்றடைவார் என கணிக்கப்பட்டுள்ளதால், அன்று பிற்பகல்  2:00 மணிக்கு மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் மனுக் கையளிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Share.

Comments are closed.