6 1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியும் என்று பழ.நெடுமாறன் கூறினார்.

Google+ Pinterest LinkedIn Tumblr +

இலங்கையில் முள்வேலி முகாமில் வதைப்படும் தமிழர்களை விடுவிக்க கோரியும், இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசை கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசார பயணம் சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.

nedumaranசேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையம் அருகில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழகத்தின் 4 முனைகளில் இருந்தும் டாக்டர் ராமதாஸ, தா.பாண்டியன், வைகோ மற்றும் நான் (பழ.நெடுமாறன்) ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்து இலங்கை தமிழர்களின் நிலை பற்றி விளக்கி வருகிறோம். நேற்றைய தினம் இந்த பயணம் மிக சிறப்பான நடந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வரவேற்றதுடன் மட்டும் அல்லாமல் ஈழத்தமிழர்களுக்கு தங்களின் உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளனர்.

நாளை (29.10.2009) திருச்சியில் 4 குழுக்களும் திருச்சியில் சந்தித்து ஒரு பிரமாண்ட கூட்டம் நடக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு மக்கள் ஆதரவாக உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்டு மக்கள் கொதிப்படைந்து உள்ளனர் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் உணர வேண்டும்.

இலங்கையில் நமது சொந்த உறவுகள், தொப்புள் கொடி உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் துயரத்தை போக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை.

இந்த நிலையில் ராஜபக்சே, கருணாநிதியை அழைத்ததாக கூறுகிறார். அங்கு சொந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே அனுமதி கிடையாது. ஆனால் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி அனுப்பிய குழு மட்டும் அங்கு சென்று பார்த்து போலியான அறிக்கை கொடுத்து, முள்வேலி முகாமில் சிக்கி தவிக்கும் 50 ஆயிரம் மக்கள் விடுவித்ததாக சொல்கிறார்கள்.

6 1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Share.

Comments are closed.