7வது நாளாக சிரமங்களின் மத்தியிலும் தொடரும் மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம்.

Google+ Pinterest LinkedIn Tumblr +
மனிதநேயன் சிவந்தன் எடுத்த முயற்சியை தன் எழுச்சியாக முன்வந்த மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம் bruxelles நோக்கி தொடர்கிறது.

31.08.2010 அன்று Moudon  என்ற பிரதேசத்தில் ஆரம்பித்து Payerne  ஊடாக 35 km  தூரம் நடந்து Avenches  என்ற பிரதேசத்தை மாலை 21:00 மணியளவில் சென்றடைந்தனர். சில இடங்களில் நடை பாதைகள் இல்லாததால் பல சிரமங்களை இவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அது மட்டும் இன்றி காலநிலை மாற்றமும் இவர்களது நடை பயணத்திற்கு கடினமாக இருக்கின்றது.

01.09.2010 அன்று இவர்கள் Avenches என்ற பிரதேசத்தில் ஆரம்பித்து Murten ஊடாக 34 km  தூரம் நடந்து Lyss என்ற பிரதேசத்தை மாலை 20:00 மணியளவில் சென்றடைந்தனர். இவர்களின் வரவை எதிபார்த்து மக்கள் அங்கு காத்திருந்தனர். அங்கு இவர்கள் தங்கள் நடைபயணத்தின் நோக்கத்தை விளக்கினர். மக்கள் இவர்களை சந்தித்தித்து உரையாடியமை இவர்களுக்கு நல்ல உற்சாகத்தை வழங்கியுள்ளது. இவர்களின் இலட்சியத்தை அடைய தங்களால் முடிந்த உதவி அனைத்தும் செய்துதருவதாகவும் கூறியுள்ளனர். அது மட்டும் இன்றி நடைபயணம் வெற்றியடைய வேண்டும் என்று மதகுரு மார்களும் தங்களின் பங்களிப்புகளை தந்துள்ளனர். அத்துடன் இவர்களுடன் சேர்த்தும் சிலர் நடந்தும் வந்தனர்.

நேற்று  (02.09.2010) Lyss என்ற இடத்தில் இருந்து ஆரம்பித்து Leuzigen ஊடாக 26 km  தூரம் நடந்து Solothurn என்ற இடத்தை நேற்று மாலை 20:00 மணியளவில் சென்றடைந்தனர். காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் நேற்று அவர்களால் அதிக அளவு தூரம் நடப்பது கடினமாகிவிட்டது. ஓர் பெண்மணி எடுத்துள்ள இந்த நடைபயணம் பலரை ஆர்ச்சரிய படுத்தியுள்ளது அது மட்டும் இன்றி மற்றைய இரண்டுபேரும் முதியவர்களே (திரு. ஜெகன் (62) , திரு. வினோத் (48) ) . ஆயினும் இன்று இவர்களுடன் பலர் சேர்ந்து நடந்ததால் நோவையும் மறந்து இவர்கள் தங்களில் நடைபயணத்தை தொடர்ந்தனர். இவர்கள் Solothurn ஐ சென்றடைந்தபோது அதிகளவான மக்கள் இவர்களை வரவேற்று நல்ல உற்சாகத்தை வழங்கினர். அத்தோடு பானம் உணவு போன்றவற்றையும் பரிமாறி இவர்களின் தேவைகளை பூர்த்திசெய்தனர்.

 
இவர்களுக்கு பல நாடுகளில் இருந்து தொலைபேசி ஊடாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் வாழ்த்துக்களை  வழங்கி உற்சாகம் அளிக்கின்றனர். இது அவர்களின் நடைபயனதிருக்கு பக்க பலமாக உள்ளது. அது மட்டும் இன்றி இவர்கள் போகும் வழியில் சந்திக்கும் சுவிஸ் மக்களும் இவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, நல்லதொரு முடிவு எம் நாட்டு மக்களுக்கு வரவேன்றும் என்று கூறி தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இன்று  இவர்களின் நடைபயணம் Solothurn என்ற இடத்தில் இருந்து ஆரம்பித்து Attiswil ஊடாக Balsthal நோக்கி தொடர்கிறது. இவர்களுடன் சேர்ந்து நடப்பவர்கள் இந்த இடங்களில் வந்து இணைந்து கொள்ள முடியும்.

இவர்களின் கோரிக்கைகள்:

  • இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  • எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
  • மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.
  • தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள  திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகியோருக்கு சுவிஸ் மக்கள் தங்களின் பங்களிப்பை தந்து இவர்களுக்கு பக்க பலமாக இருக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். இவர்களை உற்சாகபடுத்தி நடைபயணத்தை வெற்றியுடன் முடிக்க சுவிஸ் வாழ் மக்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறும் கேட்டுகொள்கின்றோம்.

 {ppgallery}news/walkforjustice/31-03/1{/ppgallery}

 

Share.

Comments are closed.