ஐ.நா நோக்கிய மனிதநேய நடைபயணம் – சிவந்தன் 8:00 மணிக்கே பிரான்சை சென்றடைவார்

Google+ Pinterest LinkedIn Tumblr +

ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் பிரித்தானிய கடற்கரையான டோவரில் இருந்து மாலை 5:50 அளவில் புறப்பட்டுள்ளார்.
 
பிரித்தானிய நேரம் பிற்பகல் 3:15 இற்கு ஊர்தித் தாங்கிக் கப்பலில் ஏறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், கப்பலில் ஏற்பட்ட தாமதம் காரமாக அடுத்த கப்பலில் செல்லவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
பிரான்சின் கரையான கலையில் சிவந்தனை வரவேற்கவும், அவருடன் இணைந்து நடக்கவும் அங்குள்ள தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் தொடர்ந்தும் காத்திருக்கின்றனர்.

Share.

Comments are closed.