தனித்தமிழீழம் தான் தமிழரிற்கான தீர்வு என்பதை சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 50 வாக்குச் சாவடிகளில் தை 23, 24ந்திகதி நடைபெற்ற கருத்துக் கணிப்பில் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். இதன்படி 99.5 வீதமானவர் ஆம் எனவும் 0.2 வீதமானோர் இல்லை எனவும் 0.3 வீதமானோரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் பதிவாகியுள்ளது.
16441 வாக்காளர் பங்கு பற்றியுள்ளனர் இதில் 16357 வாக்குகள் ஆம் எனவும் 32 வாக்குகள் இல்லை எனவும் 51 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 99.5 வீதமானவர் ஆம் எனவும் 0.2 வீதமானோர் இல்லை எனவும் 0.3 வீதமானோரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி 99.5 வீதமான அதிகப்படி வாக்குகளால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து முடிவுகளும் நேற்றைய தினமே பத்திரிகைகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இம்முடிவானது இன்றைய சுவிசின் பிரபல நாளேடுகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.