முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் – மனித உரிமைக் கண்காணிப்பகம் வலியுறுத்தல்
- tyo
- கருத்துகள் இல்லை
வவுனியாத் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமைக் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மனித உரிமைக் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ள 280,000ற்கும் அதிகமான தமிழ் மக்களை உடனடியாக சிறிலங்கா அரசு விடுவிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சிறிலங்கா அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போர் காரணமாகத் தமது சொந்த இடங்களைவிட்டு வெளியேறிய அனைவரும், அரசால் ‘நலன்புரி நிலையங்கள்’ என்று அழைக்கப்படும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பது அனைத்துலக சட்டவிதிகளை மீறும் செயல்.
புலிகளின் புதிய இராஜதந்திர முயற்சிகளுக்கு ஆதரவு: ஆஸி. தமிழர் ஒழுங்கமைப்பின் சம்மேளனம்
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புகளை வரவேற்பதாக அவுஸ்திரேலிய தமிழர் ஒழுங்கமைப்பின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அரசியல் முன்னெடுப்பு தொடர்பில், நாடு கடந்த அரசாங்கத்தை நிறுவுவதற்கான குழுவின் தலைவராக சட்டத்தரணி விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளமையை பாராட்டுவதாகவும் அது தெரிவித்துள்ளது. இந்த குழு, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களின் நலனுதவிகள், கலாசார மற்றும் அரசியல் பாதுகாப்பு தொடர்பில் செயற்பட வேண்டும் என இந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை எதிர்கொள்ளத் தயார் – மேர்வின் சில்வா
- tyo
- கருத்துகள் இல்லை
சட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக, சிறீலங்காவின் சர்ச்சைக்குரிய அமைச்சரான தொழிலமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மீதான இவரது தாக்குதல் நடவடிக்கைகள், மற்றும் அடக்குமுறைகள் காரணமாக, கொழும்பின் ஊடகங்கள் இவரை “அடிதடி அமைச்சர்” என வர்ணித்து வருகின்றன. இவ்வாறான பின்புலத்தில் களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீரவை இவரும், இவரது காடையர் குழுவும் தாக்கியுள்ளதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் தோன்றி, தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக அமைச்சர் […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia