இறுதிவரை நான் களத்திலேயே நிற்கிறேன்” என உறுதியாக சொல்லிவிட்டார் பிரபாகரன்: ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு விகடனுக்கு செவ்வி
- tyo
- கருத்துகள் இல்லை
‘சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. ‘சரணடைவதைவிட சாவதே மேல்’ என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. என்று ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
வன்னிப் பிரதேசத்தில் சிங்களப் படையினரின் கொத்துக் குண்டுகள், தமிழர்களின் மரண ஓலம் இவற்றுக்கிடையே ஈழப் போரின் இறுதி நாள் வரை அங்கேயே இருந்து, நடந்ததை அறிந்து அவதானித்து வைத்திருக்கும் ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு சில நாட்களுக்கு முன் வன்னி செட்டிக்குளம் வதை முகாமிலிருந்து படகு மூலம் தப்பித்து, நடுக்கடலில் தத்தளித்து, தமிழகத்தில் கரையேறியிருக்கிறார்..!
தற்போது மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்ட திருநாவுக்கரசை நிறைய சிரமங்களுக்கு மத்தியில் விகடன் நிறுவனத்தினார் சந்தித்துள்ளனர். பலத்த வற்புறுத்தலுக்குப் பின் திருநாவுக்கரசு விகடனுக்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு
சவால்கள் முன்னிற்கையில், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணி குறைப்பு அர்த்தமற்றது என பிரித்தானியா தெரிவிப்பு
- tyo
- கருத்துகள் இல்லை
யுத்தம் நிறைவடைந்திருந்தாலும், முகம் கொடுக்க வேண்டிய பாரிய சவால்கள் முன்னிற்கையில், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளை குறைக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
யுத்தம் நிறைவடைந்து விட்டாலும், சவால்கள் மீதமிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை அர்த்தமற்றது என பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் மலோக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
வணங்காமண் நிவாரண பொருட்களை வவுனியாவுக்கு அனுப்பும் ஏற்பாடுகள் பூர்த்தி: செஞ்சிலுவை சங்கம் தெரிவிப்பு
- tyo
- கருத்துகள் இல்லை
வணங்கா மண் கப்பலில் இருந்து கொலராடோ கப்பலுக்கு மாற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை வவுனியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்திருப்பதாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்துள்ளது.
வடபகுதியில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஐரோப்பிய வாழ் தமிழ் மக்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வணங்கா மண் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கொழும்புக்கு வந்த இக்கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து சென்னையில் கொலராடோ கப்பலுக்கு பொருட்கள் மாற்றப்பட்டு மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia