
கறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு
- tyo
- கருத்துகள் இல்லை
தொழிலாழர் கட்சியின் அழைப்பை ஏற்று, இன்று 16.07.2018, சூரிச் மாநிலத்தில், கறுப்பு ஜூலையை முன்னிட்டு, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் அவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர். இச் சந்திப்பின் போது ஈழத் தமிழர்களின் பிரச்சனைகள் பற்றியும், தமிழின அழிப்புச்சார்ந்தும் அவர்களுக்கு கூறப்பட்டதுடன், எமது போராட்டத்தின் நோக்கமும் அதன் முக்கியத்துவம் பற்றியும் தகவல்கள் பகிரப்பட்டன. இச்சந்திப்பின் போது எமது தேசிய உணவுகள், சிற்றுண்டிகள் பகிரப்பட்டு, எதிர்வரும் காலங்களில் எமது போராட்டத்தின் வெற்றிக்கு அவர்களின் உதவியும் ஆதரவும் நிச்சயம் அவசியம் […]

தமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசிய பொழுது அதை எதிர்த்து தமிழின புரட்சிக்கு வித்திட்ட தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 44வது ஆண்டு நினைவில் Bern மாநிலத்தில் மிகவும் உணர்வெளுச்சியுடன் வணக்கம் செலுத்தியுள்ளனர் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர். மாலை 19:00 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த இவ்வணக்க நிகழ்வு மாணவர் எழுச்சி பற்றிய பேச்சு, உணர்வுக்கவிவரிகள் மற்றும் தாயகப்பாடல்களால் சிறப்பித்து ஈற்றில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், மற்றும் தாரக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.

மே 18 நினைவையொட்டி நடைபெற்ற குருதிக்கொடை.
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழின அழிப்பின் அதி உச்ச கட்டமான முள்ளிவாய்க்கால் மே 18ஐ முன்னிட்டு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஜெனிவா மற்றும் பேர்ன் போன்ற நகரங்களில் குருதிக்கொடை நிகழ்வுகள் இடம்பெற்றன. இரண்டு நிலையங்களிலும் இளையோர் மற்றும் தமிழின உணர்வாளர் தங்களது குருதியினை கொடை செய்து, உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூறினர். இத்தருணத்தில் 18.05.2018 சுவிஸ் பாராளமன்றம் முன்பாக நடைபெற இருக்கும் வணக்க நிகழ்விற்கு அனைத்து தமிழ் மக்களையும் வருகை தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம். மேலதிக புகைப்படங்களுக்கு: https://www.facebook.com/media/set/?set=a.1389543701146539.1073741867.299394956828091&type=1&l=72de3c01bd
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia