வருகின்ற 28.09.2009 அன்று பிற்பகல் 14 மணிக்கு யெனீவா புகையிரத நிலையம் தொடக்கம் ஐநா முன்றல் வரை தொடுக்கப்படவிருக்கும் மனிதச்சங்கிலி. தமிழ் இளையோர் அமைப்பின் ஊடக அறிக்கை
- tyo
- கருத்துகள் இல்லை
விடுதலை உணர்வும் வேட்கையும் கொண்ட மதிப்புக்குரிய சுவிஸ் வாழ் தமிழ் மக்களே. எமது இனம் பாவப்பட்டவர்களாய் பரிதாவப்பட்டவர்களாய் பாதுகாப்பில்லாதவர்களாய் அனாதைகளாய் அகதிகளாய் அடிமைகளாய் சிறீ லங்கா பயங்கரவாத இனவெறி அரசால் சிதறடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரும் தடுப்புமுகாம் என்று ஐனா அதிகாரிகளே வர்ணிக்கக்கூடிய மின்சாரம் பாட்சப்படுகின்ற முட்கம்பி வேலிக்கு நடுவில் எமது மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு வதைகொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் ! சுதந்திர தமிழீழம் மலரட்டும் !!
- tyo
- கருத்துகள் இல்லை
தியாகி திலீபன் சொல்ல வந்தது….??? – பருத்தியன்
தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு …அன்று நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்“ என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது. “இனவிடுதலைப் போராட்டம்“ என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும்போதுதான் விடுதலைக்கான மக்கள் புரட்சியும் அதன்மூலமான விடுதலையும் சாத்தியப்படும்.
சுவிஸில் தமிழ்த்தேசிய எழுச்சிப்பிரகடணத்தை முன்னொட்டி முப்பதாயிரத்துக்கும் அதிகமான சுவிஸ் மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் சுவிஸ் தமிழ் இளையேர் அமைப்பினரால் கவனயீர்ப்பு நடாத்தப்பட்டது
- tyo
- கருத்துகள் இல்லை
தலைவிரித்தாடும் முதலாளித்துவத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கு பாவப்பட்ட பாட்டாளி மக்கள் வரி குடுத்துக் காக்க முடியாது என்ற பெயரோடு சுவிஸின் அனைத்து இடதுசாரிகளும் பாட்டாளி மக்களும் இணைந்து நடாத்திய போராட்டத்தாள் தலை நகரமான பேர்ண் அதிர்ந்தது.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia