கொரோனா வைரஸ் காரணமாக பாசல்-லேண்ட் அரசாங்கம் சமீபத்தில் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. உணவகங்கள், தங்குமிடங்கள், சினிமாக்கள் மற்றும் விளையாட்டு மையங்கள் மூடப்பட்டுள்ளன.
50 க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட அனைத்து பொது மற்றும் தனியார் நிகழ்வுகள் நாளை 6.00 மணியிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளதாக மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. அடிப்படை சேவைகளை வழங்காத அனைத்து வசதிகளும் மூடப்படும்.
கொரோனா வைரஸ் தொற்றுவதை குறைப்பதற்கு பின்வரும் நடவடிக்கைளை பாசல்-லேண்ட் அரசாங்கம் அறிவித்துள்ளது:
- 50 பேருக்கு மேல் கொண்ட அனைத்து பொது, தனியார் மற்றும் சமய நிகழ்வுகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.
- செயற்பாடுகள் (விளையாட்டுப்போட்டிகள், உடற்பயிற்சிக்கான நிலையங்கள்… தடைசெய்யப்பட்டுள்ளன.
- 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் அல்லது தாம் உடல் ஆரோக்கியமற்றவராக இருப்பின் :
- சிறுவர்களைக் கண்காணிப்பதைத் தவிர்த்தல்.
- தனிப்பட்ட, பொது விழாக்களில் பங்கேற்பதைத் தவிர்த்தல்.
- வேலைக்கோ, மருத்துவத்தேவைக்கோ அல்லது கடையில் உணவுப்பொருட்கள் வேண்டுவதற்காகவோ மட்டுமே பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பாவித்தல்.
- பாசல் லாண்டின் பொதுப் போக்குவரத்துக்களில் அதிகபட்சம் அதன் கொள்வளவின் அரைவாசியினை மக்கள் பயன்படுத்த, பொதுப் போக்குவரத்து நிறுவனங்ள் ஏற்பாடுகள் மேற்கொள்ளுவார்கள். (SBB, Taxi தவிர)
- அடிப்படை சேவைகளை வழங்காத அனைத்து கடைகளளும் மூடப்படுகின்றன.
- கடைகளில் மற்றும் சேவை நிலையங்களில் பொறுப்பானவர், தொழிலாளிகள் அரசாங்கத்தால் கொடுக்கபட்ட சகல சுகாதாரா ஒழுக்கங்களை யும் கடைப்பிடிக்கின்றார்களா என்பதை மேற்பார்வை செய்யவேண்டும்.
- உணவகம் மற்றும் ஹோட்டல் வணிகங்கள் மற்றும் கச்சேரி அரங்குகள், சினிமாக்கள், தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள், இளைஞர்-, விளையாட்டு-, ஆரோக்கிய-, உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், டிஸ்கோக்கள் போன்ற அனைத்து பொழுதுபோக்கு இடங்களும் தங்கள் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளார்கள்.
- பாசல் லாண்டின் மருத்துவநிலையம் Bruderholz-இல் இருக்கும். நிலையம் COVID-19 குறிப்பு மருத்துவமனை என்று குறிப்பிடப்படுகிறது.
- அனைத்து மருத்துவமனைகளும் உடனடியாக அவசர தேவையற்ற அனைத்து விடையங்களையும் பிற்போடவேண்டும்.
- மருத்துவமனைகள், வயோதிபர் இல்லங்கள் மற்றும் ஆபத்து மையங்களில் மற்றும் ஏனைய ஒத்த நிறுவனங்களுக்கு பொதுமக்களின் வருகை தடைசெய்யப்பட்டுள்ளது.
விதிவிலக்குகளை நிறுவனம் தீர்மானிக்கிறது (எ.கா. நோயாளிகளுக்கான வருகைகள்: குழந்தைகளின் பெற்றோர், கர்ப்பிணிப் பெண்களின் கணவர் மற்றும் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் அல்லது ஆதரவு தேவைப்படும் நோயாளிகள்). - அவசரநிலையைச் சமாளிக்க தேவைப்பட்டால், தனிப்பட்ட நபர்களிடமிருந்து தேவையான நிதிகளை (பொருள், பணியாளர்கள், சேவைகள், தங்குமிடம் போன்றவை) பறிமுதல் செய்ய பொறுப்பான அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு.
- சாத்தியமான அலுவலகங்களில், தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்ய வசதி இருந்தால், அவ்விடங்களில் நிர்வாகங்கள் தொலைவிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை அமைத்துக்கொடுக்கின்றது.
- ஏனைய முதலாளிகள் அந்த வசதியினை முடிந்தவரை செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.