தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ண் மாநிலத்தில் குருதிக்கொடை!

தாயகக் கனவுடன் மண்ணுக்காய் தங்கள் உயிர்களை நீத்த மாவீரர் நினைவு மாதம் இது. இம்மாதத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பால் உயிர் காக்கும் குருதிக்கொடை வழங்கல் நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டது. 18.11.2019 அன்று 17:00 மணி தொடக்கம் 19:00 மணி வரையில் பேர்ண் மாநிலத்தில் இக் குருதிக்கொடை வழங்கல் இடம்பெற்றது.

தாயகத்திற்காய் தங்கள் உயிர்களை கொடையாகத் தந்த மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்து, உணர்வுபூர்வமாக பலர் தங்கள் குருதியைத் தானமாக வழங்கினர். கார்த்திகை மாதமான இப்புனித மாதத்தில் மாவீரர்களின் தியாகத்தைப்‌ போற்றும் வண்ணமும் பல உயிர்களைக் காக்கும் நல்லெண்ணத்துடனும் இக் குருதிக்கொடை நிகழ்வு அமைக்கப்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.