இராணுவம் எல்லைக்காவல்துறையின் நிர்வாகத்திற்கு உதவி செய்யும்

Google+ Pinterest LinkedIn Tumblr +

கொரோனா வைரஸால் தற்போது எல்லைக்காவல் துறை நிர்வாகம் பல நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

ஓஸ்ட்ரியா ஜேர்மன் இத்தாலி மற்றும் பிறான்ஸ் ஆகிய நாடுகளுடனான எல்லைகளில் கண்காணிப்புக்கள் அதிகரித்தமையால் அனைத்து சிறிய எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் எல்லைக்காவல்துறை நிர்வாகத்தால் நீண்டகாலத்திற்கு இந்த கண்காணிப்புக்களை மேற்கொள்ள முடியாது. இந்த நிலையை கருத்தில் கொண்டு 50 இராணுவ காவல்துறையினரும் மற்றும் சில இராணுவ வீரர்களும் எல்லைக்காவல்துறை நிர்வாகத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பரிசோதனைகள், போக்குவரத்து வாகனங்களை கட்டுப்படுத்தல் மற்றும் எல்லையை காவல் காத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனி மாதம் வரை இந்த புதிய அமைப்புடன் எல்லைக்காவல்துறை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source : https://m.tio.ch/ticino/attualita/1428280/esercito-confine-afd-federale-membri-dogane-svizzera-sostegno-amministrazione

Share.

Comments are closed.