
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசிய பொழுது அதை எதிர்த்து தமிழின புரட்சிக்கு வித்திட்ட தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 44வது ஆண்டு நினைவில் Bern மாநிலத்தில் மிகவும் உணர்வெளுச்சியுடன் வணக்கம் செலுத்தியுள்ளனர் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர். மாலை 19:00 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த இவ்வணக்க நிகழ்வு மாணவர் எழுச்சி பற்றிய பேச்சு, உணர்வுக்கவிவரிகள் மற்றும் தாயகப்பாடல்களால் சிறப்பித்து ஈற்றில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், மற்றும் தாரக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.

மே 18 நினைவையொட்டி நடைபெற்ற குருதிக்கொடை.
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழின அழிப்பின் அதி உச்ச கட்டமான முள்ளிவாய்க்கால் மே 18ஐ முன்னிட்டு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஜெனிவா மற்றும் பேர்ன் போன்ற நகரங்களில் குருதிக்கொடை நிகழ்வுகள் இடம்பெற்றன. இரண்டு நிலையங்களிலும் இளையோர் மற்றும் தமிழின உணர்வாளர் தங்களது குருதியினை கொடை செய்து, உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூறினர். இத்தருணத்தில் 18.05.2018 சுவிஸ் பாராளமன்றம் முன்பாக நடைபெற இருக்கும் வணக்க நிகழ்விற்கு அனைத்து தமிழ் மக்களையும் வருகை தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம். மேலதிக புகைப்படங்களுக்கு: https://www.facebook.com/media/set/?set=a.1389543701146539.1073741867.299394956828091&type=1&l=72de3c01bd

தமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.
- tyo
- கருத்துகள் இல்லை
அன்னை பூபதி மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர். அவையாவன: -உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும். -புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். அப்போது பலர் சாகும் வரை […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia