
இனத்துவேசம் பற்றிய விழிப்புணர்ச்சி வாரத்தின் போது த.இ.அ வின் பங்களிப்பு
- tyo
- கருத்துகள் இல்லை
சனிக்கிழமை 23.03.2019, சுவிஸ் நாட்டின் தெற்கில் அமைந்திருக்கும், Ticino மாநிலத்தின், Rancate எனும் நகரில், இனத்துவேசத்திற்கு எதிரான வாரத்தில், தமிழ் இளையோர் அமைப்பு, நமது தாயக காலை உணவும் வழங்கி, தாயகத்தில் தமிழருக்கு எதிரான இனப்பிரச்சனையும் வெளிக்கொண்டு வரும் முகமாக துண்டுப்பிரசுரம் கொடுத்து விளக்கங்களும் வழங்கப்பட்டன. காலை 09 மணியில் இருந்து 11:30 வரை நடந்த இந்நிகழ்வில் இம்மாநிலத்தில் வசிக்கும் மக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
அண்ணா ! திலீபன் அண்ணா !
- tyo
- கருத்துகள் இல்லை
« ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கெளரவம். » தமிழீழ தேசீய தலைவர் மேதகு வே. பிரபாகரன். « அண்ணா.. நீங்கள் இவ்வுலகை நீங்கி 31 வருடங்கள் ஆகின்றன. நீராகாரம் இருந்து, உண்ணாநோன்பிருந்து, உடல் தளர்ந்து, உயிரிழந்தது ஏன் ? நீங்கள் அன்று முன்வைத்த கோரிக்கைகள் ஐந்து. அவை 31 வருடங்கள் களிந்தும் இன்னமும் நிறைவேறவில்லை, அண்ணா… » இந்திய அமைதி காக்கும் படை 1987இல் […]

கறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
- tyo
- கருத்துகள் இல்லை
இன்று (23.07.2018) சிங்களப் பேரினவாத அரசினால் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு கறுப்பு ஜுலை இனக்கலவரத்தின் 35வது ஆண்டை நினைவு கூர்ந்து, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழ்ப் பெண்கள் அமைப்பு இணைந்து bern மாநிலத்தில், bahnhofplatz இல் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடாத்தப்பட்டது. இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் போது நமக்கு எதிராக நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பதாகைகளும், மற்றும் கறுப்பு ஜுலை பற்றிய பேச்சு மற்றும் துண்டுப்பிரசுரங்களும் டொச் மொழியில் வழங்கப்பட்டது. மேலதிக புகைப்படங்கள்: www.facebook.com/pg/SwissTYO/photos/?tab=album&album_id=1470956313005277
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia