Browsing: ஈழம்

ஈழம்

சட்டத்தை எதிர்கொள்ளத் தயார் – மேர்வின் சில்வா

சட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக, சிறீலங்காவின் சர்ச்சைக்குரிய அமைச்சரான தொழிலமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மீதான இவரது தாக்குதல்…

ஈழம்

யேர்மனியில் காலமான கந்தையா உதயகுமார் நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பு

யேர்மனி சோலிங்கனில் கொடிய புற்றுநோயால் காலமான கந்தையா உதயகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள்.
 

ஈழம்

சீனாவின் மூலோபாயத்தை முறியடிக்க அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலையில் டில்லி

 
சீனாவின் மூலோபாயத்தை முறியடிக்க அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலையில் டில்லி

“சீனாவின் மூலோபாயத்தை முறியடிப்பதற்கான பொதுவான அக்கறையில் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்திருக்கின்றது. ராஜபக்சவின் போருக்கு உறுதியான ஆதரவை வழங்கிய பின்னர் ‘அரசியல் தீர்வை’ வலியுறுத்தும் பராக் ஒபாமா நிர்வாகத்துடன் நெருங்கிச் செயற்பட வேண்டியதாக டில்லி உள்ளது” என இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான எம்.பத்ரகுமார் தெரிவித்திருக்கின்றார்.
‘விடுதலைப் புலிகளுக்கு பிற்பட்ட காலகட்டத்தில்’ சிறிலங்கா அரசின் மீதான புதுடில்லியின் அரசியல் பிடி தளர்ந்துபோய் இருப்தையே காணக்கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கும் பத்ரகுமார், இழந்துபோன செல்வாக்கை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலையில் இந்தியா இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

ஈழம்

அரசியல் இராஜதந்திர வழிமுறை ஊடான முன்னெடுப்பு ஏன்?: செ.பத்மநாதன் விளக்கம்

அண்மையில் நமது விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குவாரம், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் அகப்புற சூழல்கள் என்பனவற்றினை கவனத்தில் எடுத்தும் அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஜதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என நாம் கருதுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

ஈழம்

இறுதிவரை நான் களத்திலேயே நிற்கிறேன்” என உறுதியாக சொல்லிவிட்டார் பிரபாகரன்: ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு விகடனுக்கு செவ்வி

‘சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. ‘சரணடைவதைவிட சாவதே மேல்’ என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. என்று ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

வன்னிப் பிரதேசத்தில் சிங்களப் படையினரின் கொத்துக் குண்டுகள், தமிழர்களின் மரண ஓலம் இவற்றுக்கிடையே ஈழப் போரின் இறுதி நாள் வரை அங்கேயே இருந்து, நடந்ததை அறிந்து அவதானித்து வைத்திருக்கும் ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு சில நாட்களுக்கு முன் வன்னி செட்டிக்குளம் வதை முகாமிலிருந்து படகு மூலம் தப்பித்து, நடுக்கடலில் தத்தளித்து, தமிழகத்தில் கரையேறியிருக்கிறார்..!

தற்போது மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்ட திருநாவுக்கரசை நிறைய சிரமங்களுக்கு மத்தியில் விகடன் நிறுவனத்தினார் சந்தித்துள்ளனர்.  பலத்த வற்புறுத்தலுக்குப் பின் திருநாவுக்கரசு  விகடனுக்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு

ஈழம்

சவால்கள் முன்னிற்கையில், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணி குறைப்பு அர்த்தமற்றது என பிரித்தானியா தெரிவிப்பு

யுத்தம் நிறைவடைந்திருந்தாலும், முகம் கொடுக்க வேண்டிய பாரிய சவால்கள் முன்னிற்கையில், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளை குறைக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

யுத்தம் நிறைவடைந்து விட்டாலும், சவால்கள் மீதமிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை அர்த்தமற்றது என பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் மலோக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

ஈழம்

வணங்காமண் நிவாரண பொருட்களை வவுனியாவுக்கு அனுப்பும் ஏற்பாடுகள் பூர்த்தி: செஞ்சிலுவை சங்கம் தெரிவிப்பு

வணங்கா மண் கப்பலில் இருந்து கொலராடோ கப்பலுக்கு மாற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை வவுனியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்திருப்பதாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்துள்ளது.

வடபகுதியில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஐரோப்பிய வாழ் தமிழ் மக்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வணங்கா மண் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கொழும்புக்கு வந்த இக்கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து சென்னையில் கொலராடோ கப்பலுக்கு பொருட்கள் மாற்றப்பட்டு மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

1 24 25 26
  • எம்மைப் பற்றி

    த.இ.அ Svizzera

    எம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.

  • Social

Copyright © 2004-2020 TYO. Powered by Vannitec.