சுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..

Google+ Pinterest LinkedIn Tumblr +

சுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்.

1. வைத்தியசாலைகள் எதிர்பார்த்தமை போன்று முற்றுமுழுதாக ஸ்தம்பிதமடையவில்லை, அந்தவகையில் வைத்தியசாலைகளில் தற்போதைய நிலையில், போதிய இடவசதிகள் உள்ளன.

2. பல்பொருள் வர்த்தக மையங்களை திறப்பதற்கு முன்னர் மக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப் படவேண்டும்.

3. 27.04.2020 இருந்து வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மற்றும் நாளாந்த பரிசோதனைகள் அனைத்தும் இயல்புநிலைக்கு வரும்.
பிசியோதெரபி, சிகை அலங்காரம், உடல் மசாஜ், முக அலங்காரம், பூக்கடைகள், பூந்தோட்ட சேவைகள் ஆகிய சேவைகள் அனைத்தும் இயல்புநிலைக்கு திரும்ப இருப்பினும் தற்போது நடைமுறையில் உள்ள சமூகப்‌ பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப் பட வேண்டும்.

4. 11.05.2020 பாடசாலை (உயர்தரத்திற்கு முன்னைய பாடசாலைகள்) மற்றும் அனைத்து கடைகளும் இயல்புநிலைக்கு திரும்பும் ஆனால் செல்லும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப்‌படும் ஏனெனில் தற்போது நடைமுறையில் உள்ள சமூகவிதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

5. 08.06.2020 பல்கலைக்கழகங்கள் மற்றும் மேற்படிப்புக்கான பாடசாலைகள், வாசிகசாலை, மிருகக்காட்சிசாலைகள் அனைத்தும் இயல்புநிலைக்கு திரும்பும். இருப்பினும் தற்போது நடைமுறையில் உள்ள சமூகவிதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

6. 20 மில்லியன் பிராங்குகள் மருத்துவ ஆராய்சிக் கூடங்களுக்கு ஒதுக்கப்பட்‌டுள்ளது. கொரோனா வைரஸ்சுக்கான மருந்து, எந்தவகையில் அது தொற்றுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி, பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை மாற்றங்கள் ஆகியவற்றை இரண்டு வருடங்களுக்குள் ஆய்வு மேற்கொள்ள இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

7. பெரிய முறையில் இடம்பெறவிருந்த நிகழ்வுகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. இவை சார்ந்த மேலதிக விபரங்கள் எதிர்வரும் கிழமைகளில் அறிவிக்கப்படும்.

தொழிற்கல்வியின் இறுதிநிலையின் போது நடாத்தப்படும் பரீட்சைகள் நடைபெற மாட்டா. அதற்குப்‌ பதிலாக இதுவரை மாணவர்கள் ஆற்றிய பரீட்சைகள் மற்றும் வகுப்பு நிலை மதிப்பீட்டின் படி அவர்களுக்கு பட்டம் (pass marks) வழங்கப்படும்.

முழுமையான நேரலையை பார்க்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்.

Source : https://www.facebook.com/srfnews/videos/653569605429033/?vh=e

Share.

Comments are closed.