1. கொரோனா வைரஸ் என்றால் என்ன?
இன்று இந்த வைரசின் அங்கிகரிக்கப்பட்ட பெயர் Sars-CoV-2 ஆகும். இந்த வைரஸ் Coronaviridae என்னும் குடும்பத்தை சேர்ந்தது இது சீனாவில் Wuhan என்னும் நகரில் 2019 இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
2. எவ்வாறு பரவும்?
இந்த வைரஸ் சிறு துளிகள் மூலம் பரவும் அதாவது இருமவதாலோ தும்மவதாலோ பரவும்.
வைரஸால் தாக்கப்பட்டவரின் துளிகள் இன்னொரு நபரின் மூக்கையோ, கண்ணையோ, வாயையோ சென்றடையலாம். இந்த வைரஸ் பரவுவதற்கு வேறு ஒரு வழியுள்ளது: உடம்பிலிருந்து வெளியேரும் வைரஸ் சில மணிநேரம் கைகளிலும், மேற்பரப்பிலும் ( கதவினது கைபிடி, …) இது இருக்கும். முன்னர் கூறியது போல கண், மூக்கு, வாயினூடாக செல்லும். இருப்பினும் 15 நிமிடங்களுக்கு இரண்டு மீட்டருக்குட்பட்ட தூரத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவருடன் இருந்தால் வைரஸ் தொற்றலாம்.
அனைத்து வயதினருக்கும் இது தொற்றலாம்.
சீனாவின் பரிசோதனை நிலையத்தில் 8 மாதக்குழந்தையிலிருந்து 90வயதுள்ளவர்கள் வரை இந்நோய் பரவியுள்ளது. பொதுவாக வைரஸ் உடல்முழுவதும் பரவுவதற்கு 4லிருந்து 7 நாள்வரை தேவை ( குறைந்தபச்சம் 1 நாள், அதிகபச்சம் 14 நாள் தேவைப்படும் ).அதற்க்கு பிற்பாடுதான் முதல் அறிகுறிகள் தோன்றும்.
3. இது எதை ஏற்படுத்தும்?
முதல் அறிகுறிகள் பருவகால தாக்கங்களை ஒத்திருக்கும். துடக்கத்தில் கைய்ச்சல், தொண்டை வலி மேலும் குமட்டல் வயிற்றுப்போக்கு, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய் தோன்றும். கடுமையான சந்தர்ப்பங்களில் நோய்த்தொற்றுகள் இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தும். தற்சமயம் நோயால் 50 வயதை தாண்டியவர்கள் கூடுதலாக தாக்கப்பட்டனர்.
4. எங்கு இருந்து வருகிறது?
சீனாவில் வௌவ்வால் போன்ற மிருகங்களை உண்ணுவார்கள். இந்த மிருகங்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவுவது மட்டுமல்லாமல் தற்பொழுது மனிதர்களகடையே பரவுகிறது. இந்த வைரஸ் எந்த ஒரு மிருகத்திலும் காணப்படவில்லை.
5. நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்?
காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் நேரடியாக மருத்துவமனைக்கு செல்லாமல் உங்கள் மருத்துவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளவும். கடினமான நிலையில் 144 என்னும் இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
6. இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதா?
தற்போது எந்தவிதமான தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல மருத்துவர்கள் அதனை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் இடுபட்டுவருகின்றனர்.
7. நாம் வைரஸால் தாக்கப்பட்டுள்ளோம் என எவ்வாறு உறுதிசெய்வது?
நீங்கள் வைரஸால் தாக்கப்பட்டுள்ளீர்களா என்று ஆய்வுக்கூடங்களில் மாத்திரமே உறுதி செய்ய முடியும்.
8. சுவிஸ் சுகாதாரத்துரை எதனை வலியுருத்துகிறது?
மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கவேண்டும் எனவும் அத்தியாவசிய சூழ்நிலைகளில் மாத்திரம் வெளியே செல்லவேண்டும் என்று கூறுகிறது.