கொரோனாவைரசும் விளக்கங்களும்

வைரஸைத் தவிர்க்க பரிந்துரைகள்:

 • விலகி இருங்கள் (உதாரணமாக: போதுமான தூரத்தை வைத்து வயதானவர்களைப் பாதுகாக்கவும்; வரிசையில் நிற்கும்போது உங்கள் தூரத்தை கடைப்பிடிக்கவும்; ஒன்றுகூடல்களின் போது உங்கள் தூரத்தை வைத்திருங்கள்)
 • உங்கள் கைகளை நன்கு கழுவுங்கள்
 • மற்றவர்களுக்கு கை கொடுப்பதை தவிர்க்கவும்
 • இருமல் மற்றும் தும்மல் வரும் பொழுது கைக்குட்டை அல்லது முழங்கையின் மடிப்பை பயன்படுத்தவும்
 • காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டால், வீட்டில் இருங்கள்
 • மருத்துவரிட்மமோ அல்லது முதலுதவி மருத்துவமனைக்கு செல்வதற்குமுன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளவும்

 

புள்ளிவிபரங்கள்:
சோதனை உறுதியானது: 17139
இறந்தவர்கள்: 378
1.04.2020 8:00

Preloader
 • இராணுவம் எல்லைக்காவல்துறையின் நிர்வாகத்திற்கு உதவி செய்யும்

  இராணுவம் எல்லைக்காவல்துறையின் நிர்வாகத்திற்கு உதவி செய்யும்

  கொரோனா வைரஸால் தற்போது எல்லைக்காவல் துறை நிர்வாகம் பல நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஓஸ்ட்ரியா ஜேர்மன் இத்தாலி மற்றும் பிறான்ஸ் ஆகிய நாடுகளுடனான எல்லைகளில் கண்காணிப்புக்கள் அதிகரித்தமையால் அனைத்து சிறிய எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் எல்லைக்காவல்துறை நிர்வாகத்தால் நீண்டகாலத்திற்கு இந்த கண்காணிப்புக்களை மேற்கொள்ள முடியாது. இந்த நிலையை கருத்தில் கொண்டு 50 இராணுவ காவல்துறையினரும் மற்றும் சில இராணுவ வீரர்களும் எல்லைக்காவல்துறை நிர்வாகத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பரிசோதனைகள், போக்குவரத்து வாகனங்களை கட்டுப்படுத்தல்Read More

 • ஜெனிவா: அவசரச்சிகிச்சையில் இருப்பவர்களில் பாதி நபர் 65 வயதிற்கு குறைந்தோர்.

  ஜெனிவா: அவசரச்சிகிச்சையில் இருறப்பவர்களில் பாதி நபர் 65 வயதிற்கு குறைந்தோர்.

  ஜெனீவா சுகாதார அதிகாரிகள் நேற்று தங்கள் மாநிலத்தில் உள்ள கோவிட்-19 நிலவரம் குறித்த விரிவான அறிக்கையை வழங்கினர். மொத்தம் 1604 பேர் நோய்க்கு உள்ளாகியும், 258 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், 122 நோயாளிகள் வீட்டிற்க்கு திரும்பியும், 20 பேர் இறந்தும் உள்ளனர். தீவிர கவனிப்பு கட்டமைப்பில் 50 நோயாளிகளும், அவர்களில் 48 செயற்கை சுவாசத்திலும் உள்ளனர். எனினும், அவசர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் பல்வேறு வயதுப் பிரிவினராகக் காணப்படுகிறார்கள். அவர்களில் பாதிப்‌ பேர் 65 வயதுக்கு கீழ்Read More

 • BAG: நடத்தை விதிகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது முக்கியம்.

  BAG: நடத்தை விதிகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது முக்கியம்.

  – கொரோனா நெருக்கடியின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் வழங்கினர். – ஏப்ரல் 4 வரை, மொத்தம் 3,500 சுவிஸ் நாட்டை சார்ந்த வெளிநாட்டிலிருப்பவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள், இதில் 1400 நபர்கள் வியாழக்கிழமை மாலை வரை கொண்டுவரப்படுவார்கள். ஆனால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நபர்கள் மேலும் இருப்பார்கள். இவர்களுக்கு ஆதரவு கொடுக்கப்படுகிறது – நிதி ரீதியில் – தற்போது ஆயிரக்கணக்கான சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர், முதன்மையாகRead More

 • 24.03.2020 ஊடக அறிக்கை

  “கொவிட்-19 புதிய விபரம், இடர்கால நிவாரணம், வாடகை வீடு மாறுதல் பற்றி இன்றைய ஊடக மாநாட்டில்! – சுவிஸ்”

  நெருக்கடி மையம் மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பின் பொறுப்பாளர் பற்றிக் மத்திஸ்: “உலகம் முழுவதும் கொறோனா மூலம் ஏற்படும் பாதிப்பு- எண்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. அமெரிக்காவிலும் இதன் அதிகரிப்பு தெரிகின்றது. உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளையும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோளிடுகின்றது. பொதுவாக ஐரோப்பாவில், அதாவது குறிப்பாக இத்தாலி மற்றும் ஸ்பெயினில் நிலவரம் கடுமையாக உள்ளது. ஆனால் இத்தாலியின் உயிரிழப்பின் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அருகு நாடுகளான யேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஒஸ்ரியாவில் கொறோனாRead More

 • பெற்றோர், சிறுவர் மற்றும் இளையோருக்குரிய ஆதரவு.

  பெற்றோர், சிறுவர் மற்றும் இளையோருக்குரிய ஆதரவு.

  * சிறுவர் மற்றும் 25 வயது வரை உள்ள இளையோருக்குரிய ஆதரவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 147* உ‌‌ளவியல் சார்ந்த எவ்விதமான கேள்விகள், சந்தேகங்கள் அல்லது சிக்கல்கள் இருப்பின், இந்த தொலைபேசி எண்ணுக்கு 24h/24h மணிநேரமும் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம். ரகசியம் பேணப்பட்டும். மேலதிக விபரங்களை இவ் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் : www.147.ch. இன்று, கொரொனா வைரஸினால், நாம் அனைவரும் கட்டாயமாக வீட்டில் இருக்கவேண்டும். இச் சுழலில், குடும்பங்களின் மத்தியில் பிரச்சனைகள் வருவதுண்டு.Read More

 • கொரோனா வைரஸ் என்றால் என்ன? தெரிந்துகொள்ள வேண்டிய 8 விடையங்கள்.

  1. கொரோனா வைரஸ் என்றால் என்ன? இன்று இந்த வைரசின் அங்கிகரிக்கப்பட்ட பெயர் Sars-CoV-2 ஆகும். இந்த வைரஸ் Coronaviridae என்னும் குடும்பத்தை சேர்ந்தது இது சீனாவில் Wuhan என்னும் நகரில் 2019 இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 2. எவ்வாறு பரவும்? இந்த வைரஸ் சிறு துளிகள் மூலம் பரவும் அதாவது இருமவதாலோ தும்மவதாலோ பரவும். வைரஸால் தாக்கப்பட்டவரின் துளிகள் இன்னொரு நபரின் மூக்கையோ, கண்ணையோ, வாயையோ சென்றடையலாம். இந்த வைரஸ் பரவுவதற்கு வேறு ஒரு வழியுள்ளது: உடம்பிலிருந்துRead More

 • உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2வது இடம்பிடித்த சுவிட்சர்லாந்து

  உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2வது இடம்பிடித்த சுவிட்சர்லாந்து

  கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்லும் இத்தாலியும் நியூயார்க்கும் உலகின் கவனம் ஈர்த்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்து உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடம் பிடித்தது ஆச்சரியத்துக்குரிய விடயம்தான். ஒரு காலத்தில் நேரம் பார்ப்பதற்கு கைக்கடிகாரங்களைப் பார்க்கவேண்டாம், சுவிஸ் ரயில்கள் வரும் நேரத்தைப் பார்த்தால் போதும் என்பார்கள். அப்படி நேரம் தவறாமை முதலான பல விடயங்களில் உலகை ஆச்சரியப்படுத்திய சுவிட்சர்லாந்து, இன்று உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளில் இரண்டாவதுRead More

 • வீட்டில் இப்போது இருக்க வேண்டும்! உயிர்களை காப்பாற்ற வேண்டும்!

  எப்படி நம்மை நாம் பாதுகாக்கலாம் கொரோனாவை நிறுத்த வீட்டில் இப்போது இருக்க வேண்டும்! உயிர்களை காப்பாற்ற வேண்டும்! – உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு… – மருத்துவரிடம் அல்லது மருந்தகம் செல்வதற்கு … – மற்றவர்களுக்கு உதவி புரிவதற்கு … – வீட்டில் வேலை செய்யும் வாய்ப்பில்லாமல் இன்னமும் வேலை இடத்திற்கு செல்வதற்கு… … மட்டுமே, வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும்!

 • அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களின் விநியோகம் – தமிழ் இளையோர் அமைப்பு

  இன்றைய உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் விரிவடைந்து வரும் இச் சூழ்நிலையில் நாம் வசிக்கும் நாடான சுவிற்சர்லாந்திலும் அதன் தாக்கம் அதிகரித்தவண்ணமே உள்ளது. நாம் அனைவரும் இதனை அறிந்து கொண்டுதான் உள்ளோம். சுவிஸ் அரசானது ஆரம்பத்திலேயே வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. எனவே இவ் இக்கட்டான சூழ்நிலையை நாம் உதாசீனப்படுத்தாமல் சுவிஸ் நாட்டின் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை மற்றும் அரசின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம் எனவே இச் சூழ்நிலையில்Read More

 • திச்சினோ மாநில அரசாங்கம் மேலதிகமான விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது.

  திச்சினோ மாநில அரசாங்கம் மேலதிகமான விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது.

  65 வயதும் அதற்கு மேற்ப்டோருக்கு மற்றும் நோயால் மிகுந்த தாக்கத்தை அடையக்கூடியவர்களுக்கும், பின் வரும் விதிமுறைகள் விதிக்கப்பட்டன. – மளிகைகடைளுக்கு செல்வது தடைவிதிக்கப்பட்டது. அவர்கள் மற்றவரது உதவியை நாடவேண்டும் என கூறப்பட்டுள்ளது, மேற்கூறிய உதவிகள் அரசாங்கத்தாலும் வழங்கப்படுகிறன. – இளையவர்களை பராமரிப்பதை தவிர்க்கவேண்டும். – மருத்துவத்தேவைகளுக்கும் அனுமதிக்கப்பட்ட வேலைகளுக்கு செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே செல்லவேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது. – அவ்வாறு வெளியே செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் இவர்கள் சமூக விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும்.Read More

 

காலவரிசை:

0-Corona

மார்ச் 27
திசினோவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 76

திசினோவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 76

திசினோவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 76 கடந்த 24மணித்தியாலத்தில் 287 பெயர்களுக்கு இந்த நோய் பரவியுள்ளது. மொத்தமாக மாநிலத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1688 ஆகும்.

மார்ச் 25

பெற்றோர், சிறுவர் மற்றும் இளையோருக்குரிய ஆதரவு.

* சிறுவர் மற்றும் 25 வயது வரை உள்ள இளையோருக்குரிய ஆதரவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 147* உ‌‌ளவியல் சார்ந்த எவ்விதமான கேள்விகள், சந்தேகங்கள் அல்லது சிக்கல்கள் இருப்பின், இந்த தொலைபேசி எண்ணுக்கு 24h/24h மணிநேரமும் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம். ரகசியம் பேணப்பட்டும். மேலதிக விபரங்களை இவ் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் : www.147.ch. இன்று, கொரொனா வைரஸினால், நாம் அனைவரும் கட்டாயமாக வீட்டில் இருக்கவேண்டும். இச் சுழலில், குடும்பங்களின் மத்தியில் பிரச்சனைகள் வருவதுண்டு. அந்தவகையில், இத் தொடர்பு மையம் துறைசார்..Read More

மார்ச் 23

Corona உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2வது இடம்பிடித்த சுவிட்சர்லாந்து

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்லும் இத்தாலியும் நியூயார்க்கும் உலகின் கவனம் ஈர்த்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்து உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடம் பிடித்தது ஆச்சரியத்துக்குரிய விடயம்தான். ஒரு காலத்தில் நேரம் பார்ப்பதற்கு கைக்கடிகாரங்களைப் பார்க்கவேண்டாம், சுவிஸ் ரயில்கள் வரும் நேரத்தைப் பார்த்தால் போதும் என்பார்கள். அப்படி நேரம் தவறாமை முதலான பல விடயங்களில் உலகை ஆச்சரியப்படுத்திய சுவிட்சர்லாந்து, இன்று உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடம் பிடித்தது எப்படி என்ற கேள்வி..Read More

மார்ச் 23

திசினோ – 48 பேர் உயிரிழந்துள்ளனர்

மொத்தமாக 1165 பேருக்கு திசினோ மாநிலத்தில் இந் நோய் பரவியுள்ளது மற்றும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். source: ti.ch

மார்ச் 21

சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கான சோதனை கருவிகள் பற்றாக்குறை! எச்சரிக்கும் அதிகாரிகள்

சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கான சோதனை கருவிகள் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகளின் பற்றாக்குறையை நாடு எதிர்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக சுவிட்சர்லாந்தில், தற்போது வரை 6,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, மக்கள் வீட்டிற்குள்ளே இருக்கும் படியும், அவசியமற்ற பயணங்களை தவிர்க்கும் படியும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸிற்கான சோதனைகளின் பற்றாக்குறையை நாடு எதிர்கொள்வதாக அந்நாட்டு அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை எச்சரித்துள்ளனர். மேலும் தெற்கு டிசினோ பிராந்தியத்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள் (ICU)..Read More

மார்ச் 21

திசினோ: 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

திசினோ மாநிலத்தில் 84 பேருக்கு இத் நோய் மேலும் பரவியுள்ளது மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 918 பேருக்கு திசினோ மாநிலத்தில் இந் நோய் பரவியுள்ளது மற்றும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந் நோயானது ஒவ்வொரு 100’000 பேரில் 257.8 பேருக்கு இந்த மாநிலத்தில் பரவியுள்ளது. மற்றைய மாநிலங்களிடன் ஒப்பிடையில் திசினோவில் பரவிய எண்ணிக்கை அதிகமாக உள்ளது. source: tio.ch

மார்ச் 20

இன்று முதல் சுவிஸ் மக்கள் அனைவரும் இது வரை வெளியிட்ட சமூக விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும்- Alain Berset

5 நபர்களுக்கு மேல் ஒரு இடத்தில் ஒன்று கூட முடியாது அதனை விட குறைந்த நபர்கள் ஒன்று கூடினால் அவர்கள் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும். இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாவிடில் காவல்துறையால் 100 frக்கு அபராதம் அறவிடப்படும். அனைத்து நிறுவனங்களும் விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும். இவற்றை கடைப்பிடிக்காவிடில் குறிப்பிட்ட நிறுவனங்கள் மூடப்படும்.

மார்ச் 20

இன்று மாலை 6 மணியிலிருந்து 23 ஆம் திகதி மாலை 6 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது

இன்று (20.03.2020) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23.03.2020) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மார்ச் 20

புள்ளிவிபரங்கள் இலங்கை (21.03.2020, 10H00)

சோதனை உறுதியானது: 72 உறுதியானது: 0 இறந்தவர்கள்: 1 21.03.2020 10:00 Source : www.epid.gov.lk/  

மார்ச் 19

பொய்யான செய்திகள், அறிவித்தல்கள்

Wattsapp இல் பரவி வரும் கீழ்க்காணும் செய்தி பொய்யானது. இன்று இரவு 11:30 மணி முதல், யாரும் தெருவில் இருக்க முடியாது, கதவுகளையும் ஜன்னல்களையும் மூடுவார்கள். கொரோனா வைரஸ் ஒழிப்பு நெறிமுறையின் ஒரு பகுதியாக 5 ஹெலிகாப்டர்கள் கிருமிநாசினியை தெளிக்கின்றன. உங்கள் எல்லா தொடர்புகளுக்கும் பரவுங்கள்! சுவிஸ் நான் சேவை.

பதிவுகள்

Corona Tamil Hotline

Corona Tamil Hotline

23

மொத்த அழைப்புக்கள்

 

MORE VIDEO