24.03.2020 ஊடக அறிக்கை

Google+ Pinterest LinkedIn Tumblr +

நெருக்கடி மையம் மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பின் பொறுப்பாளர் பற்றிக் மத்திஸ்: “உலகம் முழுவதும் கொறோனா மூலம் ஏற்படும் பாதிப்பு- எண்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. அமெரிக்காவிலும் இதன் அதிகரிப்பு தெரிகின்றது. உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளையும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோளிடுகின்றது. பொதுவாக ஐரோப்பாவில், அதாவது குறிப்பாக இத்தாலி மற்றும் ஸ்பெயினில் நிலவரம் கடுமையாக உள்ளது. ஆனால் இத்தாலியின் உயிரிழப்பின் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அருகு நாடுகளான யேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஒஸ்ரியாவில் கொறோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. சுவிற்சர்லாந்தில் இன்று காலை வரை ஏறத்தாழ 9000 பேருக்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை கொறோனாவால் 90 பேர் சுவிஸில் இறந்துள்ளனர். 80’000 பேர் சுவிஸில் கொறோனா காரணமாக பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.


தொழில் துறை அமைச்சர் போறிஸ் சூரிகெர்: “இது வரை 400’000 பேர் வேலையின்மை சலுகைக்கு பதிந்துள்ளனர். மூன்றில் ஒரு பகுதி உணவகப்பிரிவுகளில் வேலை செய்பவர்களாவார்கள். மற்றும் 27’000 நிறுவனங்கள் இதற்குப் பதிந்துள்ளனர். வேலையின்மை சலுகைக்கு பதிந்தவர்கள் சுவிஸில் பணியாற்றுவர்களின் 8% என்பது குறிப்பிடத்தக்கது. உரிய பணம் உரியவர்களிற்கு வந்து சேரும், ஆனால் அதிகமானவர்கள் இதற்கு பதிந்துள்ளதால் தாமதமாக வாய்ப்பு உண்டு. எனவே மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.


வீட்டு வசதிக்கான கூட்டாட்சி அலுவலகத்தின் அமைச்சர் மாற்றின் சிறென்: “தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு, அதாவது சுகாதாரம் மையப்பொருளாக இருப்பதால், வீடு மாறுதலை தவிர்ப்பதே நல்லது. அதிகம் அவசியம் என்றால் மட்டுமே மாற முடியும், மாற வேண்டும் என நாங்கள் மக்களிற்கு கூறுகின்றோம். ஆனால் இதன் அர்த்தம் வீடு மாறுதலை தடை செய்வது என்பதில்லை. வீடு வாடகையூடாக சட்ட வழக்குகள் போன்றவை வருவதை தவிர்க்குமாறு வாடகை வீடுகளில் வாழ்பவர்களிற்கும், வீட்டின் உரிமையாளர்களிற்கும் தெரிவிக்கின்றோம். வீட்டுரிமையாளரும், வாடகையாளரும் உரிய பிரச்சனையைப்பற்றி இணைந்து பேசி முடிவெடுப்பதே சிறந்த தீர்வு ஆகும்!”

Share.

Comments are closed.