சனி, 23.02.2019, சுவிஸ் நாட்டின், லவுசான் ( Lausanne) நகரில், சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு லவுசான் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்புடன் இணைந்து, வேற்றின மக்கள், மற்றும் இரண்டாம் தலைமுறையினருக்கு நமதுகலாசாரம், பண்பாடு, வரலாறு போன்றவற்றை பற்றிஎடுத்துக்கூறும் முகமாக “Découvrons la culture tamile”, என்ற தலைப்பில் வழங்கப்பெற்ற நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மாலை 17:30 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வு 21:30 வரை நடன நிகழ்ச்சி, வீணை, மிருதங்கக்கச்சேரி, ஒப்படை, மற்றும் மொழி, தேசியம், பண்பாடு சார்ந்த கேள்வி பதில் போட்டியுடன் சிறப்பாக நடைபெற்றது.