ஜெனிவா: அவசரச்சிகிச்சையில் இருப்பவர்களில் பாதி நபர் 65 வயதிற்கு குறைந்தோர்.

Google+ Pinterest LinkedIn Tumblr +

ஜெனீவா சுகாதார அதிகாரிகள் நேற்று தங்கள் மாநிலத்தில் உள்ள கோவிட்-19 நிலவரம் குறித்த விரிவான அறிக்கையை வழங்கினர்.
மொத்தம் 1604 பேர் நோய்க்கு உள்ளாகியும், 258 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், 122 நோயாளிகள் வீட்டிற்க்கு திரும்பியும், 20 பேர் இறந்தும் உள்ளனர்.

தீவிர கவனிப்பு கட்டமைப்பில் 50 நோயாளிகளும், அவர்களில் 48 செயற்கை சுவாசத்திலும் உள்ளனர்.
எனினும், அவசர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் பல்வேறு வயதுப் பிரிவினராகக் காணப்படுகிறார்கள்.
அவர்களில் பாதிப்‌ பேர் 65 வயதுக்கு கீழ் உள்ளனர்.

இந்தவகையில், 65க்கு உட்பட்டவர்களும் இந் நோயினை எதிர்க்க உரிய சுகாதார ஆலோசனைகளை அவசியம் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்பதை
மாநில மூத்த மருத்துவர் கடினமாக வலியுறுத்தியுள்ளார்.

கோவிட்-19-இனால் ஜெனீவாவில் பாதிக்கப்பட்டவர்ளின் எண்ணிக்கைகள் :

  • 70% – 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்,
  • 25%- 65க்கும் 80 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்,
  • மீதியுள்ள 5% – 30க்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
Share.

Comments are closed.