உயிர்த்த ஞாயிரை முன்னிட்டு பலர் விடுமுறைக்கு திச்சினோ மாநிலத்திற்கு வர உள்ளனர்.
ஊரி மற்றும் திச்சினோவின் மாநில காவல்துறையினர் இதனை தடுப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள கைகோர்த்துள்ளனர் னர்.
Göschenenனில் சோதனைச் சாவடி ஒன்றினை அமைக்க உள்ளனர். இதன் மூலம் வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை குறைக்கலாம் என்பதே காவல்துறையின் நோக்கம் ஆகும்.
இந்த நடவடிக்கை சரக்குகளின் போக்குவரத்தினையும் திச்சினோ மற்றும் இத்தாலியில் வாழும் மக்களையும் பாதிக்காது.
பிற பயணிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரம் ஒன்றினை பெறுவர்.
அதன் பின்னர் பயணத்தை தொடர்வதை குறித்த முடிவு பயணிகளைச் சார்ந்ததாகும் .
கடந்த இரு ஆண்டுகளின் Gotthard குகை போக்குவரத்தை குறித்த புள்ளிவிவரங்களை நோக்கும் போது தற்போதைய நிலை மிகவும் மாறுபட்டு காணப்படுகிறது.
இருப்பினும் அரசாங்கத்தின் வலியுறுத்தல்களை மீறி விடுமுறையின் காரணமாக பிற சுவிஸ் மக்கள் திச்சினோ மாநிலத்திற்கு வந்து விடுவார்கள் என்பதை குறித்து அச்சம் உள்ளது.
Source : https://www.rsi.ch/news/ticino-e-grigioni-e-insubria/Il-San-Gottardo-resta-aperto-12919049.html