அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களின் விநியோகம் – தமிழ் இளையோர் அமைப்பு

Google+ Pinterest LinkedIn Tumblr +

இன்றைய உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் விரிவடைந்து வரும் இச் சூழ்நிலையில் நாம் வசிக்கும் நாடான சுவிற்சர்லாந்திலும் அதன் தாக்கம் அதிகரித்தவண்ணமே உள்ளது. நாம் அனைவரும் இதனை அறிந்து கொண்டுதான் உள்ளோம்.

சுவிஸ் அரசானது ஆரம்பத்திலேயே வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. எனவே இவ் இக்கட்டான சூழ்நிலையை நாம் உதாசீனப்படுத்தாமல் சுவிஸ் நாட்டின் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை மற்றும் அரசின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம் எனவே இச் சூழ்நிலையில் நாம் எமது வீடுகளை விட்டு வெளியே செல்லுதல் என்பது பாதுகாப்பற்றது அத்தோடு சுவிஸ் அரசும் அத்தியாவசியம் அற்று வெளியே செல்லவேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

எனவே இச்சூழலில் ஜெனிவா, லவுசான், சூரிச், வாலிஸ், லுசேர்ன், பாசல் மற்றும் திச்சினோ ஆகிய மாநிலங்களில் யாருக்கேனும் வெளியில் சென்று அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் வைத்தியரின் ஆலோசனையின் அடிப்படையில் சீட்டுகள் மூலம் மாத்திரைகளைக் கொள்வனவு செய்வதில் சிரமமான சூழலில் உள்ளவர்கள் மற்றும் விசேட தேவை உள்ளவர்களுக்கு (குழந்தைகளுடன் இருப்பவர்கள், வயதானவர்கள், நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் மற்றும் மனதளவில் பலவீனமானவர்கள்) மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் நாம் உதவ எண்ணியுள்ளோம்.

கீழே உள்ள துண்டுப்பிரசுரத்தில் போடப்பட்ட கால அட்டவணைப்படி அதில் உள்ள தொடர்பு எண்களூடாக எம்மை தொடர்பு கொள்ளும் போது உங்களுக்கு உதவ நாம் காத்திருக்கின்றோம்.

எம்முடன் சேர்ந்து இச்சேவையைச் செய்யவிரும்பின் எம்மைத் தொடர்பு கொள்ளளவும்.

நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு- சுவிற்சர்லாந்து

Corona Tamil Hotline

Corona Tamil Hotline

Share.

Comments are closed.