திச்சினோ மாநிலத்தில் உயர் கல்விகளாகிய liceo மற்றும் commercio-வில், இந்த ஆண்டு வாய் மொழித் தேர்வு நடைபெறாது.
இவ்வருடம் உயர் நிலைகல்விக்கான எழுத்துத்தேர்வு நடைபெறாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை குறித்து சுவிஸ் அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
கொரோனா வைரசின் தாக்கத்தால் 15ஆம் திகதி பங்குனி மாதம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. தற்போதைய நிலையில் வீட்டில் இருந்தவாறே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் உயர்நிலைக்கான தேர்வுகளுக்கு மாணவர்களை உட்படுத்துவது கடினம் என கல்வித்துறை மாநில அதிகாரி Manuele Bertoli கூறியுள்ளார்.
எழுத்துத் தேர்வுகள் தொடர்பான முடிவு 29ஆம் திகதி சித்திரை மாதம் எடுக்கப்படும். பல மாநிலங்கள் தேர்வுகள் இடம்பெறவேண்டுமெனக் கூறினாலும் சில மாநிலங்கள் அவை நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன, அவற்றுள் திச்சினோ மாநிலமும் ஒன்றாகும்.
Source : https://m.tio.ch/ticino/attualita/1433880/esami-maturandi-decisione-berna-scritti