லுகானோ மாநிலத்தில் முக்கியமான பொது இடங்கல் இன்று முதல் மூடப்படுகின்றன

Google+ Pinterest LinkedIn Tumblr +

இன்று லுகானோ நகராட்சி பொது மக்கள் சந்திப்பதை தடை செய்யும் நோக்கத்தில் சில பொது இடங்களை மூட முடிவெடுத்துள்ளது.
பின் வரும் இடங்கள் பொதுமக்களின் பாவனைக்கு தடை செய்யப்பட்டுள்ளன:
Piazza Bossiக்கும் Villa Castagnola வுக்கும் ஏரிக்கும் இடையே இருக்கும் பரப்பளவு; Lanchetta பகுதியில் உள்ளக் ஏரிக்கரை; Via Rivieraவில் இருக்கைகள் இருக்கும் பகுதி; Caronaவில் உள்ள Chiesa di Santa Maria d’Ongero போகும் வழியும் அங்கு உள்ள வாகன தரிப்பிடம்.

இந்த முடிவு பலர் ஒரு இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்க எடுக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் Granciaவிற்கு செல்லும் பாதை; Cassarateயின் ஏரிற்கு செல்லும் வழி மற்றும் Piazza Manzoni, Palazzo Civicoவிற்கும் ஏரிற்கும் இடைப்பட்ட பகுதி; Brèயில் உள்ள பொழுது போக்கிற்கான பகுதி; via Tassinoவில் உள்ள camperகளுக்கான தரிப்பிடம் போன்ற இடங்கள் பொதுமக்களின் பாவனைக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

மக்கள் அரசாங்கம் வெளியிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்காவிடில் மேலும் சில பொது இடங்களுக்கான பிரவேச அனுமதி தடை செய்யப்படலாம்.

லுகானோ நகராட்சி மக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி கூறி முடிந்தவரை வீட்டில் இருக்குமாறு வலியுறுத்துகிறது. இந்த வகையில் தான் கோரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் எனவும் நினைவு படுத்துகிறது.

 

Source : https://www.cdt.ch/ticino/lugano/lugano-chiude-anche-alcune-aree-pubbliche-XC2532437

Share.

Comments are closed.