தமிழின அழிப்பின் அதி உச்ச கட்டமான முள்ளிவாய்க்கால் மே 18 நாள் நடந்து இன்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதுவரை காலமும் எமது மக்கள் நீதி கேட்டு நின்றும், ஸ்ரீ லங்கா அரசிடமிருந்தோ, முக்கியமாக சர்வதேசத்தினிடமிருந்தோ எவ் பதிலும் கிடைக்கவில்லை. இவற்றை மனதில் வைத்து, அடுத்தகட்டமாக வேற்றின மக்களை நாடி, அவர்களிடம் எம்மவர் அவலத்தை எடுத்துக்கூறி, எம் இன மக்களின் இழப்புகளை வெளிக்கொணர்ந்து அவர்களை விழித்தெழச் செய்து, எம்முடன், எமக்காய் சேர்ந்து பயணிக்க வைக்கும் நோக்குடன், சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் ”இருளுக்குள் ஒளி ஏற்றிடுவோம்” எனும் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வினை இன்றைய நாள், பேர்ண் புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் உள்ள Bahnhofplatz-இல் சிறப்புர நடாத்தியுள்ளனர்.
இன்று மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற “இருளுக்குள் ஒளி ஏற்றிடுவோம்” நிகழ்வின் கருவாக, எம் இனத்தின் விடுதலைக்காய் உயிர் நீத்த மாவீரர்களையும், இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களையும் நினைவுகூர்ந்து, நிகழ்வில் எம்மோடு கலந்து கொண்ட மக்களால், 1000க்கு மேலான மெழுகுவத்திகள் ஏற்றப்பட்டன #let’slamp1000candles campaign
இதில் இளையோர்களினதும், வேற்றினமக்களினதும் பங்கும், ஆதரவும் அழப்பெரியதாய் இருந்தது.
அத்துடன், இன்றைய நாளில், சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு, போரினால் உயிர் இழந்த மக்கள், காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழின அளிப்பு மற்றும் நில அபகரிப்புப் போராட்டங்களை விளக்கி, அவற்றின் நீதி கோரல் அவசியத்தினை எடுடத்துக்கூறி துண்டுப்பிரசுரங்களை வழனங்குவதோடு, மே 18 சார்ந்து, அவற்றின் விளக்கனங்கள் பொறிக்கப்பட்ட, தண்ணீர்ப்போத்தல்களையும் அனைவருக்கும் கொடுத்து சிறப்பித்தது.
முக்கியமாக தமிழ் இளையோர் அமைப்பினர், சுவிஸ் தேசிய அஞ்சல் நிறுவனமான *Post உடன் இணைந்து தயாரித்த முள்ளிவாய்க்கால் நினைவு முத்திரைகள் இன்று பெருமையுடன் வெளியிடப்பட்டன.
இவ்வாறு அனைவரும் இணைந்து பயணித்து, உலகத்தை விழித்தெழ வைத்து, தமிழ் இன மக்களுக்காய் நீதி கேட்டு இயங்குவோம் !