Browsing: செய்திகள்

ஈழம்

வருகின்ற 28.09.2009 அன்று பிற்பகல் 14 மணிக்கு யெனீவா புகையிரத நிலையம் தொடக்கம் ஐநா முன்றல் வரை தொடுக்கப்படவிருக்கும் மனிதச்சங்கிலி. தமிழ் இளையோர் அமைப்பின் ஊடக அறிக்கை


விடுதலை உணர்வும் வேட்கையும் கொண்ட மதிப்புக்குரிய சுவிஸ் வாழ் தமிழ் மக்களே. எமது இனம் பாவப்பட்டவர்களாய் பரிதாவப்பட்டவர்களாய் பாதுகாப்பில்லாதவர்களாய் அனாதைகளாய் அகதிகளாய் அடிமைகளாய் சிறீ லங்கா பயங்கரவாத இனவெறி அரசால் சிதறடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரும் தடுப்புமுகாம் என்று ஐனா அதிகாரிகளே வர்ணிக்கக்கூடிய மின்சாரம் பாட்சப்படுகின்ற முட்கம்பி வேலிக்கு நடுவில் எமது மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு வதைகொள்ளப்படுகிறார்கள்.

ஈழம்

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் ! சுதந்திர தமிழீழம் மலரட்டும் !!

தியாகி திலீபன் சொல்ல வந்தது….???     – பருத்தியன்

 தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்புஅன்று நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.இனவிடுதலைப் போராட்டம் என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும்போதுதான் விடுதலைக்கான மக்கள் புரட்சியும் அதன்மூலமான விடுதலையும் சாத்தியப்படும்.

ஈழம்

சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறீலங்காப் படையினர் நடத்திய தாக்குதலின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (21.09.2009) அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ஈழம்

‘சனல் – 4’ காணொளி தொடர்பாக பக்கச்சார்பற்ற, சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்: பிலிப் அல்ஸ்ரன்

சிறீலங்காப் படையினரால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி குறித்த பக்கச்சார்பற்ற, சுயாதீன விசாரணைகளை சிறீலங்கா அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா சபையின் மனித உரிமைகள் நிபுணர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஈழம்

மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு குறித்து அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்படும்: த.தே.கூட்டமைப்பிடம் ஐ.நா. பிரதிநிதி உறுதி

போர் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தி அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் உடனடி கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் லின் பஸ்கோ தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்திற்கு உதவியளிக்கும் எனவும் லின் பஸ்கோ தெரிவித்துள்ளார்.

ஈழம்

மெனிக் பாம் முகாமே உலகில் மிகப் பெரியது: ஐ.நா. அதிகாரி

 
 
வன்னி தடுப்பு முகாம்களை, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் சொந்த வீடுகள் போன்று உணர வைப்பதற்காக எதையும் செய்ய முடியாது எனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை உயர் அதிகாரிகள், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மெனிக் பாம் முகாமே மிகப் பெரிய அகதி முகாம் என்றும் வர்ணித்துள்ளனர்.

ஈழம்

இடம்பெயர் முகாம் மக்கள் விரக்தியின் விளிம்பில்: நேரில் பார்த்த ஐ.நா. விசேட பிரதிநிதி; இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு


 வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் பொறுமையிழந்த நிலையிலும் விரக்தியடைந்த நிலையிலும் காணப்படுகின்றனர் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, நேற்று  முகாம்களிலுள்ள மக்களை நேரில் பார்வையிட்ட  ஐ.நா.சபையின் விசேட பிரதிநிதி லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார்.

ஈழம்

நிலையான முடிவைப் பலமாக்க கனடியத் தமிழர் வாக்கெடுப்பு கூட்டம்

தமிழீழ தாயக விடுதலையை முன்னகர்த்தும் புலம்பெயர்ந்த தமிழரின் பெருமுயற்சியாக நிலையான முடிவைப் பலமாக்க, கனடியத் தமிழ் மாணவர் சமூகம், கனடியத் தமிழ் சமூகம் ஆகியன இணைந்து நடாத்தும் கனடியத் தமிழர் வாக்கெடுப்பு முதலாவது கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (20.09.2009) கனடா கந்தசாமி கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
1976 ல் வட்டுக்கோட்டைத் தீர்மானம்

ஈழம்

இலங்கை சமாதானத்தை தொலைத்து விட்டது: த எக்ஸாமினர் ஆங்கில இணையத்தளம்

 1945ம் ஆண்டு ஜேர்மனி, ஏலியஸ் படையினரிடம் சரணடைந்தன் பின்னர், ‘யுத்தத்தில் வெற்றி பெற்றாலும், சமாதானத்தை தோற்றுவிட்டோம்” என்ற வின்சனட் சேர்ச்சிலின் கருத்துப்படியே இலங்கை அரசாங்கத்துக்கும் நிகழ்ந்திருப்பதாக த எக்ஸாமினர் என்ற ஆங்கில இணையத்தளம் தெரிவித்துள்ளது.

1 22 23 24 25 26 29