Browsing: செய்திகள்

ஈழம்

பாலித கோகன்ன, அர்ஜூன ரணதுங்கவுக்கு விசா வழங்க பிரித்தானிய தூதரகம் மறுப்பு: இராஜதந்திர உறவில் புதிய நெருக்கடி

palitha_1சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் பாலித கோகன்ன மற்றும் உல்லாசப் பயணத்துறை பிரதி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ‘விசா’ வழங்குவதற்கு கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.

ஈழம்

புலிகள் நாங்கள் பதுங்கலாம்! உறங்கலாமா? : ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை ஆசிரியர்

tamileelam_dh_1கடந்த மாவீரர்தின உரையின்போது தேசியத் தலைவர் அவர்கள் எமக்கு தெளிவான செய்தி ஒன்றைச் சொல்லியுள்ளார். ‘புலம்பெயர் தமிழர்களே போராடுங்கள்! இளையோரே போராடுங்கள்! உலகத் தமிழர்களே போராடுங்கள்! இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் இன்றைய ஈழநாடு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழம்

பிரித்தானியா TYO தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

புலத்தமிழர்சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த ஆண்டு கொடூர தமிழ் இனப்படுகொலை யுத்தத்திற்கு பின்பு, மிகுதி மக்களை முகாம்களில் அடைத்து 100 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் அந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை தட்டிக் கழிக்கும் சிறீலங்க அரசாங்கத்தின் செயலை கண்டித்து பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்கள் மற்றும் மாணவர்கள் இன்று(04.09.09) தொடக்கம் பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தின் முன்றலில் தொடர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஈழம்

இரு உலகங்கள் என்ற சிங்களப் படத்தை வெளியிட கனடாத் தமிழர்கள் எதிர்ப்பு

புலம்பெயர் கனடியத் தமிழர்கள் மீண்டும் ஒருமுறை தம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர். கனடாவில் 66வது வெனிஸ் திரைப்படக் கண்காட்சியில் போட்டியிட தயாரிக்கப்பட்ட சிங்கள இனவாதப் படமான “இரு உலகங்களுக்கு மத்தியில்” என்ற படத்தை கனடா ரொரண்டோவில் திரையிடவும், விழாவில் இப்படம் போட்டிக்கு முன்வைக்கவும் தமிழர்களிடம் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

ஈழம்

வணங்காமண் நிவாரணம் தமிழர்களுக்கு கிடைக்க கூடாது என்ற நோக்கில் இலங்கை செஞ்சிலுவை சங்கம் செயற்படுகிறது: பொதுமக்கள் கவலை

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தை நிர்வகிப்பவர்கள், சிங்கள இனத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், வேண்டுமென்றே நிவாரணப் பொருட்கள் அல்லல்பட்டுவரும் தமிழர்களுக்கு கிடைக்க கூடாது என்ற நோக்கத்திலேயே செயல்படுவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஈழம்

தமிழர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப இங்கிலாந்து முயற்சி?

இலங்கையில் இருந்து வெளியேறி அகதிகளாக வந்து இங்கிலாந்தில் தங்கியுள்ள தமிழர்களை இலங்கைக்குத் திரும்ப அனுப்ப அந்நாடு முயற்சிக்கிறது என்று அங்கு வாழும் தமிழர்கள் கூறியுள்ளனர்.

ஈழம்

சரத் பொன்சேகா முல்லைத்தீவு விஜயம்


 பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

1 23 24 25 26 27 28