24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்

Google+ Pinterest LinkedIn Tumblr +

– 200 நபர்கள் தீவிர சிகிச்சை நிலையத்திலும், 41 நபர்கள் இறந்தும் உள்ளார்கள்.

– அனைத்து தற்பாதுகாப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

– Covid-19-இனால் 153’000 மக்கள் வேலையற்று போய் நிற்கிறார்கள்.
– தொழிலாளிகளை வேலைக்கு வரவேற்கு‌ம் அனைத்து முதலாளிகளும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்.

– வெளிநாடு சென்ற 6950 சுவிஸ் நாட்டு மக்களை 33 சுவிஸ் விமானங்கள் கூட்டி வந்துள்ளன.
அவர்களுடன் 2000 வெளிநாட்டு மக்களும் கூட்டி வரப்பட்‌டுள்ளார்கள்.
இதற்கு 10 மில்லியன் CHF சிலவாகியுள்ளது (20% அரசாங்கத்தின் பங்கு, 80% மக்களின் பங்கு).

– 1000 சுவிஸ் ராணுவ வீரர்கள் மீண்டும் வீடு திரும்ப அனுமதிக்கப்‌பட்டுள்ளார்கள்.

– தற்போதைய நிலையில், முதியோர் இல்லங்களில் பார்வையாளர்களை தடைசெய்வது பாதுகாப்பிற்குரியது.
இதனை ஒவ்வொரு மாநிலங்களும் தான் முடிவு செய்ய வேண்டும்.

– தற்போதைக்கு ஆன்மீக மையங்களின் திறப்பு நாள் முடிவெடுக்கப்படவில்லை.

– சிறுவர்கள் கோரோனா வைரஸினை தமக்குள் கொண்டு, அதனைக் கொடுக்கும் ஆற்றல் உடையவர்கள் இல்லை.
அதனால், பள்ளிகள் மீண்டும் திறப்பதில் ஆபத்தில்லை.

இருந்தாலும், முதியோர்கள் அவர்களுடன் தொடர்புகளைத் தவிர்ப்பது சிறந்தது. ஏனெனில் அவர்கள் ஆபத்தான பிரிவினை சேர்ந்தவர்கள்.

– தாங்களாக செய்யும் மூக்கு வாய் மூடிகளை அணிவதைத் தவிர்ப்பது சிறந்தது.

Media link : https://youtu.be/yMFMateLliU

Share.

Comments are closed.