சுவிசில் நடைபெற்ற “கறுப்பு ஜூலை 83” நினைவு கூரல் நிகழ்வு.

Google+ Pinterest LinkedIn Tumblr +

சிறீலங்கா இனவாத அரசின் இனப்படுகொலையின் ஓரங்கமான “கருப்பு ஜூலை” நினைவு கூரல் நிகழ்வு 24 .07 .2010 சனிக்கிழமை  பிற்பகல் 16:00 மணிக்கு  Bern, Waisenhausplatz சதுக்கத்தில் நடைபெற்றது.

 

அக வணக்கத்தோடு ஆரம்பமான இந்தநிகழ்வில் யூலை இனக்கலவரத்தின் போதும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் போதும் உயிரிழந்த மக்களுக்கான நினைவுத்தூபிக்கு நினைவுச்சுடரேற்றி  மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
 
“கறுப்பு ஜூலை 83” நினைவு சார்ந்தும் தற்கால நிலைமைகள் பற்றியும் தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் பெண்கள் அமைப்பு , ஈழத்தமிழரவை ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உரையாற்றியிருந்தனர்.  
வதைமுகாம்களில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள எமது உறவுகளையும், முன்னாள் போராளிகளையும் விடுவிக்குமாறும்,
தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்துகொண்டிருக்கும்  இனப்படுகொலையையும், தமிழர் தாயகத்தில் தொடரும் நில ஆக்கிரமிப்பையும் சர்வதேச சமூகம் தடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்ததுடன்,  ஐ.நா. நிபுணர் குழுவினால் மேற்கொள்ளப்படும்   போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதரவு வழங்குவோம் என்றும் தமதுரையின்போது தெரிவித்தனர்.
கடந்த காலங்களை போலல்லாது இம்முறை மக்கள் தொகை மிக குறைவாக இருந்தாலும், நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
 
இந்நிகழ்வுபோலல்லாது, லண்டனிலிருந்து சுவிஸ் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ. நா. சபை நோக்கி நீதிகேட்டு புரட்சிப்பயணம் மேற்கொண்டு வரும் சிவந்தன் ஓகஸ்ட் 5  ஆம் நாள் வியாழக்கிழமை சுவிசின்  எல்லையைத் தொடவுள்ளார்.
அவரை வரவேற்று அவருடன் பயணிப்பதற்கு புறப்பட சுவிஸ் வாழ் தமிழ் மக்களை ஆயத்தமாகுமாறு கோரியதோடு, எதிர்வவரும் ஓகஸ்ட் 6 ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 14 .00 மணிக்கு ஐ.நா. முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெற ஏற்பாடாகியுள்ள கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் அறைகூவல் விடுக்கப்பட்டது.

 

{ppgallery}news/swissblkjuly{/ppgallery} 

Share.

Comments are closed.