ரொறன்ரோ மாநகரத்தில் கெனடி மற்றும் லோரன்ஸ் சந்திக்கு அருகில் 1199 கெனடி வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் இவ்வுண்ணா நோன்பு நடைபெறுகிறது.
24 மணிநேரத் தொடர் உண்ணாநோன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் உண்ணா நோன்பில்,
சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தர அரசியற் தீர்வை தமிழீழ மக்களிற்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும்,
இலங்கைத் தீவில் இலங்கை அரசின் வதைமுகாம்களில் உள்ள தமிழ் மக்கள் அவர்களின் சொந்த இடத்தில் மீளக் குடியேற்ற நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட வேண்டும்,
இனவழிப்பினைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் இலங்கை அரசினை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்
ஆகிய கோரிக்கைகளைத் தமது உண்ணாநோன்புக் கோரிக்கையாக முன்வைத்து இவ்விளையவர்கள் இதனைத் தொடர்கிறார்கள்.
இந்திய அமைதிப்படை தமிழீழப் பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த வேளையில், ஐந்து முக்கிய கோரிக்கைகளை வைத்து அமைதிவழியில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தித் தன் உயிரினைத் தமிழினத்திற்குக் கொடையாக்கிய தியாகதீபம் லெப்கேணல் திலீபனின் நினைவு நாளில் இவ்வுண்ணாநோன்புப் போராட்டத்தினை இளையவர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.