SBB யின் வரலாற்றில் மிகப்பெரிய நேர அட்டவணை மாற்றம் எனக் கருதப்படுகிறது.
சுவிற்சலாந்து அரசு அசாதாரண சூழ்நிலையை அறிவித்த பின்னர், SBB யும் அதன் தொடரூந்து நேர அட்டவணையில் மாற்றங்களை செய்துள்ளது. வியாழக்கிழமை முதல், நீண்ட தூர ரயில்கள், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மட்டுமே இயக்கப்படும்.
மாற்றம் செய்யப்பட்ட நேர அட்டவணை வியாழக்கிழமை முதல் மூன்று கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படும். மிகப்பெரிய மாற்றங்கள் திங்கள் முதல் உணரப்படும்; ஒரு வாரத்தில் (மார்ச் 26) வியாழக்கிழமை நீண்ட தூர போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்படுகின்றன. இந்த நேர அட்டவணை அடுத்த அறிவிப்பு வரை, குறைந்தபட்சம் ஏப்ரல் 26, 2020 வரை செல்லுபடியாகும்.