இன்று 16.03.2020 சுவிஸ் அரசாங்கம் “அசாதாரண நிலமை” இன்று இரவு 00.00க்கு அமுல்ப்படுத்தவுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 19 வரை உணவகங்கள் மூடப்படும். அவர்கள் take-away அல்லது வீட்டுக்கு delivery வழங்க முடியும். அவசரகால தங்குமிடங்களைப் போலவே ஹோட்டல்களும் திறந்திருக்கும்.
சினிமாக்கள், தியேட்டர்கள்,
விளையாட்டு தளங்கள் மற்றும் மற்ற அனைத்து ஓய்வு இடங்களும் மூடப்படும்.
அனைத்து பொழுதுபோக்கு மையங்களும் (உடற்பயிற்சி, சினிமாக்கள், திரையரங்குகள் போன்றவை) ஏப்ரல் 19 வரை மூடப்பட்டுள்ளன. உணவு, சுகாதார பொருட்கள் வழங்கும் கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். எரிபொருள் நிலையங்கள், மருந்துக் கடைகள், மருந்தகங்கள், வங்கிகள் மற்றும் தபாற்சேவை வழங்கும் நிறுவனங்கள் திறந்த நிலையில் இருக்கலாம்.
இத்துடன் இன்று முதல் ஜேர்மனி, பிரான்சு, அவுஸ்ரியா, போன்ற நாடுகளின் எல்லைகளில் மிகவும் கடுமையான கண்காணிப்பு, கட்டுப்பாடு நடைபெறும்.
20:30 புதுப்பிப்பு…
அனைவரையும் வெளியிட்ட சமூகவிதிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை வீட்டில் இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
அத்தியாவசியமான சேவைகள் எந்த ஒரு தடையும் இன்றி வழங்கப்படும். இந்த சமையத்தில் மக்களின் ஒத்துளைப்பு முக்கியமானது.
மரணசடங்குகளை தவிர்த்து சித்திரை 19வரை அனைத்து ஒன்றுகூடல்களும் தடைசெய்யப்படவுள்ளன.
மளிகைக்கடைகள், வெதுப்பகங்கள், பெட்டிக்கடைகள், இறைச்சிக்கடைகள், அவசர உதவி நிலையங்கள் மற்றும் மருத்துவக்கடைகளைத் தவிர்த்து ஏனைய கடைகள் மூடப்படவுள்ளன.
அனைத்து எல்லைகளிலும் காவலர்கள் சோதனைகளை செய்துவருகின்றனர் மற்றும் நுளைவு அனுமதி: வேலை செய்பவர்களுக்கும், சுவிஸ் குடிமக்களுக்கும் மற்றும் சுவிஸ் நாட்டில் வதிவிட உரிமை பெற்றவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும்.
மருத்துவ நிலையங்களிலும், காவல் நிலையங்களிலும் 8000 இராணுவ வீரர்கள் உதவி புரிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
சுகாதாரத்துறைக்கே முன்னுரிமையை கொடுக்கவேண்டும் என்று கூறுகின்றது சுவிஸ் அரசாங்கம்.
*இந்த நடவடிக்கைகள் மக்களை பாதுகாப்பதற்க்காகவும், ஒவ்வொரு உயிரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் மற்றும் ஒரே நேரத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைகளில் வைத்தியம் செய்ய இட வசதி போதாமையினாலும் எடுக்கப்பட்டுள்ளன*