சுவிட்சர்லாந்தும் நொசத்தல் மாநிலமும் ஒரு விதிவிலக்கான சுகாதார நிலைமையை எதிர்கொள்கின்றன.

Google+ Pinterest LinkedIn Tumblr +

சுவிட்சர்லாந்தும் நொசத்தல் மாநிலமும் ஒரு விதிவிலக்கான சுகாதார நிலைமையை எதிர்கொள்கின்றன. தற்போது கோவிட் -19 கொரோனா வைரஸின் பரவலை விரைவாக நிறுத்துவதற்கும், அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது கட்டாயமாகும். இந் நோக்கத்திற்காக நொசத்தல் அரசாங்கம், மறு அறிவிப்பு வரும் வரை, உணவு, அத்தியாவசிய பொருட்கள் கடைகள், பழம் மற்றும் காய்கறி சந்தைகள், மருந்தகங்கள், வங்கிகள், கியோஸ்க்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் தவிர அனைத்து வணிகங்களையும் மூட வேண்டும் என உத்தரவிட்டுருக்கிறது.

கோவிட் -19 வைரஸ் சுவிட்சர்லாந்தில் மிக விரைவாக பரவுகிறது. ஒவ்வொரு 2 நாட்களும் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. மருத்துவ உதவிகள் தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் கணிசமாக அதிகரிக்கும். இந்த வேகத்தில், சுகாதார அமைப்பு மிக விரைவாக நோயாளிகளால் நிரம்பி விடும், சுகாதார வல்லுநர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாகிவிடும். கூடுதல் ஆதரவு திறன்களை உருவாக்க முடியுமென்றாலும், மருத்துவமனைகளின் அதிக சுமை எல்லா நோயாளிகளின் கவனிப்பை பாதிக்கும். அவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டாலும் சரி, அல்லது வேறு மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டாலும் சரி (மாரடைப்பு, பக்கவாதம், சாலை விபத்து, புற்றுநோய் போன்றவை…)

தொற்றுநோயின் உச்சநிலையை கட்டுப் படுத்துவதற்காக, பெடரல் கவுன்சில், மாநில கவுன்சில் ஆகியவை 13 மார்ச் 2020 திகதி அன்று அவசர நடவடிக்கைகளை அறிவித்தன. இந்த நடவடிக்கைகள் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட கூட்டாட்சி மற்றும் கன்டோனல் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை, குறிப்பாக தொற்றுநோய்கள் குறித்த கூட்டாட்சி சட்டம் மற்றும் மக்கள் பாதுகாப்பைப் பற்றிய கன்டோனல் சட்டம்.

மாநில கவுன்சில் பின்வரும் விதிகளை உடனடியாக அமல்படுத்த உத்தரவிடுகிறது.

இன்று மாலை 24.00 மணி முதல், உணவு கடைகள், பழம் மற்றும் காய்கறி சந்தைகள், மருந்தகங்கள், விலங்குகளுக்கான உணவு கடைகள், கியோஸ்க்குகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் வங்கிகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும். திங்கள், மதியம் 2:00 மணி வரை உணவகங்கள் திறக்கலாம். இதனை தவிர அனைத்து பொது நிறுவனங்களும், எல்லா பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு நேர நிறுவனங்களும் நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளன. உணவு மற்றும் அடிப்படை தேவைகள் தொடர்ந்து கிடைக்கும்.

20 பேர் வரை கொண்ட அத்தியாவசிய கூட்டங்களைத் தவிர்த்து, எந்தவொரு நபரின் பொது அல்லது தனியார் நிகழ்வுகள் உடனடியாக தடைசெய்யப்பட்டுள்ளன. சுகாதார நடவடிக்கைகள், மக்களுக்கு இடையிலான தூரம் எல்லா சந்தர்ப்பங்களிலும் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்.

கன்டோனல் நிர்வாகத்தின் அனைத்து கவுண்டர்களும் திங்கள்கிழமை முதல் மூடப்பட்டுள்ளன. மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள், கட்டாய சேவைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக விதிவிலக்குகள் துறைத் தலைவர்களால் அங்கீகரிக்கப்படலாம். தொலைதொடர்பு (தொலைபேசி, மின்னஞ்சல் போன்றவை) அல்லது அஞ்சல் மூலமாக தொடர்புகள் பயன்படுத்த வேண்டும், தவிர்க்க முடியாத தேவை ஏற்பட்டால் மக்கள் முற்கூட்டிய சந்திப்பு (appointment) மூலம் சேவைகளை திட்டமிடலாம். வரவிருக்கும் நாட்களில் இவ்வாறு செயற்படவே நகராட்சிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தொற்றுநோயைச் சமாளிப்பதற்கும், ஒவ்வொருவரின் பாதுகாப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட ஒரு சுகாதார அமைப்பைப் பாதுகாப்பதற்கும், நமக்கு உள்ள ஒரே வாய்ப்பு வைரஸ் பரவுவதை கட்டுப் படுத்துவதே ஆகும். வைரஸின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவது அனைவரின் பொறுப்பாகும். இதற்காக கூட்டமைப்பு, மாநிலங்கள் வழங்கிய வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

இந்த நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, அனைத்து இணைப்புகளும் சேர்ந்து சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

சுகாதார அமைப்பு மற்றும் அன்றாட வாழ்க்கையில் தன்னார்வ அழைப்புகளின் சலுகைகளை எளிதாக்க மாநில கவுன்சில் ஏற்பாடு செய்கிறது.

Share.

Comments are closed.