பணிநீக்கங்கள் அல்லது கட்டாய விடுமுறைகள் இல்லை – UNIA

Google+ Pinterest LinkedIn Tumblr +

கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் நெருக்கடியின் செலவுகள் தொழிலாளர்களை தாக்கக்கூடாது எனவும் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படவேணடும் எனவும் தொழிலாளர்கள் சங்கம் UNIA தெரிவித்துள்ளது.

உடனடி வேலை நீக்கமோ, ஊதிய வெட்டுக்களோ கட்டாய விடுமுறைகளோ அனுமதிக்கப்படமாட்டாது எனவும்
ஊதியங்கள் உத்தரவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசியல் நடவடிக்கைகள் எடுக்குமாறு இவர்களால் கேட்கப்படுகின்றது.

பிள்ளைகளை பராமரிப்பதால் பெற்றோர்கள் தமது சட்டக்கடமைகளை செய்துவருகின்றனர். இவர்கள் பொறுத்தமட்டில், தமது வேலையினை செய்ய முடியாது இருந்தால், அவர்களது ஊதியம் அரசசட்டவாக்கப்படி வழங்கப்படும்.

இந்த அசாதாரண நிலையை முன்னிட்டு UNIAவிற்கு தொழிலாளர்கள் பல கேள்விகளை தொடுத்து வருகின்றன.

பலருக்கு இந்த நிலை எவ்வாறு மாற்றமடையும் என்பது தெளிவில்லாமல் உள்ளது. உதாரணத்திற்கு குறைக்கப்பட்ட வேலை நேரம், அல்லது பிள்ளைகளை பராமரிப்பதால் வேலைக்கு செல்ல முடியாமை தொடர்பான கேள்விகளே அதிகமாக உள்ளன.

soruce: tio.ch

Share.

Comments are closed.