திச்சினோ மாநில அரசாங்கம் மேலதிகமான விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது.

Google+ Pinterest LinkedIn Tumblr +

65 வயதும் அதற்கு மேற்ப்டோருக்கு மற்றும் நோயால் மிகுந்த தாக்கத்தை அடையக்கூடியவர்களுக்கும், பின் வரும் விதிமுறைகள் விதிக்கப்பட்டன.

– மளிகைகடைளுக்கு செல்வது தடைவிதிக்கப்பட்டது. அவர்கள் மற்றவரது உதவியை நாடவேண்டும் என கூறப்பட்டுள்ளது, மேற்கூறிய உதவிகள் அரசாங்கத்தாலும் வழங்கப்படுகிறன.
– இளையவர்களை பராமரிப்பதை தவிர்க்கவேண்டும்.
– மருத்துவத்தேவைகளுக்கும் அனுமதிக்கப்பட்ட வேலைகளுக்கு செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே செல்லவேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது.
– அவ்வாறு வெளியே செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் இவர்கள் சமூக விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும்.
– இவர்கள் மருத்துவத்தேவைகளுக்கும் அனுமதிக்கப்பட்ட வேலைகளுக்கு செல்வதற்கும், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கலாம்.

திச்சினோ மாநிலத்தில் நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள்.
அனைத்து வணிக, அரச நிறுவணங்களும் மற்றும் உணவகங்களும் மூடப்படவேண்டும். பொதுமக்களுடம் தொடர்பு ஏற்படுத்தும் அனைத்து பணிகளும் தடை செய்யப்படவேண்டும். இதற்கு விதிவிலக்காக அரசாங்கத்தால் அத்தியாவசியம் என நிர்னையிக்கப்பட்ட சேவைகள் இயங்கும்.

மளிகைக்கடைகள், நிறுவனங்களின் உணவகங்கள், பொதுமக்களின் பாவனைக்கு உட்படாத உணவகங்கள், உணவுகளை வழங்கும் சேவைகள், மருத்துவக்கடைகள், சேவை நிலையங்கள், தொடரூந்து நிலையங்கள், வங்கிகள், தபால் அலுவலகங்கள், விடுதிகள், சமூக கட்டமைப்புகள், எரிபொருள் நிலையங்கள், இவற்றுடன் சுகாதார நிலையங்களும் திறந்துள்ளன. அதாவது மருத்துவ சிகிச்சை நிலையங்கள், மருத்துவமனைகள், மருத்துவ அலுவலகங்கள்.
அது மட்டும் அன்றி உதவி செய்பவர்களுக்கும் இந்த விதிமுறைகள் அமுலபடுத்தப்படமாட்டாது.

அயல்நாட்டு எல்லை தொழிலாளர்கள் மேற்கூறிய சேவைகளை புரியாவிடில் திச்சினோ மாநிலத்திற்குள் பிரவேசிக்கமுடியாது.
தொழில் புரியும் இடங்களை பாதுகாப்பிற்கு உட்படுத்தும் வேலைகளை தவிர ஏனைய கட்ட அமைப்பு வேலைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

முதன்மையான பொதுநலம் கருதி அரசாங்கம் குறிப்பிட்ட வேலைகளை செய்வதற்கு அனுமதிவழங்கலாம்.
நிறுவனங்களுக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
மரணச்சடங்குகள் நெருங்கிய உறவினர்களுடன் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

source: cdt.ch

Share.

Comments are closed.