கொரோனா வைரஸ் – இத்தாலி எல்லை தாண்டிய போக்குவரத்துப் பயண தரிப்பிடம் பற்றிய விபரம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

TILO வலைத்தளத்தின் புகையிரதங்களுக்க் திச்சினோ மாநிலத்தில் கடைசி தரிப்பிடம்.
மூன்று யூரோசிட்டி இணைப்புகளை சார்ந்த இந்த நடவடிக்கை, இத்தாலிய அதிகாரிகள் விடுத்துள்ள உத்தரவைப் பின்பற்றுகிறது.

கியாசோ – இன்று முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை, இத்தாலிக்குச் செல்லும் எல்லை தாண்டிய ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இத்தாலிய போக்குவரத்து மற்றும் சுகாதார அமைச்சர்களால் மார்ச் 28 சனிக்கிழமையன்று விடுக்கப்பட்ட கட்டளைச் சட்ட திற்கிணங்க, இத்தாலிய எல்லைக்குள் நுழைவதற்கான நடைமுறைகளை SBB ஒழுங்குபடுத்துகிறது. இந்த ஏற்பாட்டால் பொருள் போக்குவரத்து பாதிக்கப்படாது.

TILO வலைத்தளத்தின் ரயில்கள் இன்றோடு தனது பயணத்தை திச்சினோவில் முடிகின்றது. அதாவது (S10) கியாசோவிலும் மற்றும் (S50) ஸ்டேபியோவிலும் தங்களது பயணத்தை முடிகின்றன. அதே நேரத்தில் S30 (காடெனாஸ்ஸோ-லூயினோ-கல்லரேட்) முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் எல்லை தாண்டிய பிராந்திய போக்குவரத்திற்கு கூடுதலாக, மூன்று யூரோசிட்டி இணைப்புகளும் இம் முடிவுகளால்

பாதிக்கப்படுகின்றன :

பாஸல்-பிரிக்-மிலான்,
ஜெனீவா-பிரிக்-மிலான்,
சூரிச்-மிலான்

இத்தொடர்புடைய புகையிரதங்கள், பிரிக் மற்றும் கியாசோவில் தங்களது பயணத்தை முடிக்கின்றன.

தனிப்பட்ட இணைப்புகள் பற்றிய கூடுதலான தகவல்களுக்கு, இணையத்தளத்தினை பார்வையிட SBB உங்களை அழைக்கிறது.
நீங்கள் SBB மொபைல் பயன்பாட்டையும் பயன்படுத்தலாம், SBB ரயில் சேவையையும் பயன்படுத்தலாம்.

தொடர்புகளுக்கு :
0848 44 66 88 (CHF 0.08/min. சுவிஸிலிருந்து) அல்லது +41 512 257 800 (வெளிநாட்டிலிருந்து).

Source : https://m.tio.ch/ticino/attualita/1428624/traffico-treni-corsa-rete-ffs

Share.

Comments are closed.