பிரித்தானியா TYO தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

புலத்தமிழர்சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த ஆண்டு கொடூர தமிழ் இனப்படுகொலை யுத்தத்திற்கு பின்பு, மிகுதி மக்களை முகாம்களில் அடைத்து 100 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் அந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை தட்டிக் கழிக்கும் சிறீலங்க அரசாங்கத்தின் செயலை கண்டித்து பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்கள் மற்றும் மாணவர்கள் இன்று(04.09.09) தொடக்கம் பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தின் முன்றலில் தொடர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

1. தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களை வெளியேற்றி அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றப்படவேண்டும்
2. போர் குற்றங்களுக்காக சிறீலங்கா அரசாங்கத்திற்கு தகுந்த தண்டனை கொடுக்கப்படவேண்டும்.
3. தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ தமிழீழ தனியரசை அங்கீகரிக்கவேண்டும்
ஆகிய மூன்று கோரிக்கைகளை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் எதிர்வரும் வெள்ளிகிழமைகளில் மதியம் 12 மணியிலிருந்து மாலை 6 மணிவரை பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தின் முன்றலில் முன்னெடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றனர் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர் (Tamil Youth Organisation).

Share.

Comments are closed.