பெற்றோர், சிறுவர் மற்றும் இளையோருக்குரிய ஆதரவு.

Google+ Pinterest LinkedIn Tumblr +

* சிறுவர் மற்றும் 25 வயது வரை உள்ள இளையோருக்குரிய ஆதரவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண் : 147*

உ‌‌ளவியல் சார்ந்த எவ்விதமான கேள்விகள், சந்தேகங்கள் அல்லது சிக்கல்கள் இருப்பின், இந்த தொலைபேசி எண்ணுக்கு 24h/24h மணிநேரமும் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம். ரகசியம் பேணப்பட்டும்.

மேலதிக விபரங்களை இவ் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் : www.147.ch.

இன்று, கொரொனா வைரஸினால், நாம் அனைவரும் கட்டாயமாக வீட்டில் இருக்கவேண்டும். இச் சுழலில், குடும்பங்களின் மத்தியில் பிரச்சனைகள் வருவதுண்டு.

அந்தவகையில், இத் தொடர்பு மையம் துறைசார் அறிஞர்கள் மூலம் சிறுவர்கள் மற்றும் இளையோர்களுக்கு, கேட்டல், பகிர்தல், ஆலோசனை கொடுத்தால் போன்ற பல முறைகளினூடாக வேண்டிய ஆதரவினை கொடுக்க முயல்கிறது.

இவர்களின் செயற்பாடு உளம் சார்ந்தது மட்டுமே என்பதனால், சுகாதாரம் சார்ந்த கேள்விகளுக்கு இவர்களைத் தொடர்புகொள்ள இயலாது.

அவை சார்ந்த தகவல்களுக்கு : www.vd.ch/coronavirus எனும் இணையத்தளத்தினை நாடவும்.

பெற்றோர்களுக்கான தொடர்பு எண் : 021/644 20 32

மேற்குறிப்பிட்ட விடையங்கள் சார்ந்து, பெற்றோர்கள் இந்த எண்ணுக்கு, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை, இலவசமாகத் தொடர்புகொள்ளலாம். ரகசியம் பேணப்பட்டும்.

Share.

Comments are closed.