இடம்பெயர் மக்கள் தொடர்பில் மட்டுமே ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி லியன் பாஸ்கோவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
போலியான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் போது அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் ஒரு நீதியும் இலங்கைக்கு மற்றொரு நீதியுமா என இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது.
அனைத்து நாடுகளுக்கும் ஒரே விதமான சட்டங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு பின்பற்ற வேண்டுமென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான நடவடிக்கைகள் இராணுவ சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்விவகாரங்களில் பான் கீ மூன் தலையீடு செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.