தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை!
தாயகக் கனவுடன் மண்ணுக்காய் தங்கள் உயிர்களை நீர்த்த மாவீரர் நினைவு வாரம் இது. இவ்வாரத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக சுவிஸ் ஈழத்தமிழரவை, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு, தமிழீழ பெண்கள் அமைப்பு சுவிஸ் ஆகிய மூன்று அமைப்புக்களால் உயிர் காக்கும் குருதிக்கொடை வழங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. 23.11.2017 அன்று காலை 09:30 மணி தொடக்கம் 12:00 மணி வரையில் பேர்ன் மாநிலத்தில் இக் குருதிக்கொடை வழங்கல் இடம்பெற்றது.
தாயகத்திற்காய் தங்கள் உயிர்களை கொடையாகத் தந்த மாவீரர்களில் நினைவுகளைச் சுமந்து உணர்வு பூர்வமாக பலர் தங்கள் குருதிகளை தானமாக வழங்கினர். கார்த்திகை மாதமான இப்புனித மாதத்தில் மாவீரர்களின் தியாகத்தை போற்றும் வண்ணமும் பல உயிர்களைக்காக்கும் நல்லெண்ணத்துடனும் இக் குருதிக்கொடை அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக புகைப்படங்கள்: https://www.facebook.com/pg/SwissTYO/photos/?tab=album&album_id=1238351372932440