தமிழின அழிப்பின் அதி உச்ச கட்டமான முள்ளிவாய்க்கால் மே 18ஐ முன்னிட்டு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஜெனிவா மற்றும் பேர்ன் போன்ற நகரங்களில் குருதிக்கொடை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இரண்டு நிலையங்களிலும் இளையோர் மற்றும் தமிழின உணர்வாளர் தங்களது குருதியினை கொடை செய்து, உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூறினர்.
இத்தருணத்தில் 18.05.2018 சுவிஸ் பாராளமன்றம் முன்பாக நடைபெற இருக்கும் வணக்க நிகழ்விற்கு அனைத்து தமிழ் மக்களையும் வருகை தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
மேலதிக புகைப்படங்களுக்கு: https://www.facebook.com/media/set/?set=a.1389543701146539.1073741867.299394956828091&type=1&l=72de3c01bd