ஊரே எரிய மன்னன் பீடில் வாசித்த கதையாய் இருக்கிறது விஜய் மற்றும் விஜய் அன்ரனியின் கதை! 35 வருட கால விடுதலை வரலாறு அடித்து நொருக்கப்பட்டிருக்கிறது.
அரை இலட்சம் மக்களை இழந்துவிட்டோம் சர்வதேசம் சாக்குக்காகிலும் நிறுத்து! அங்கே குண்டு போடாதே! இங்கே போடாதே! என்று சொல்லிக்கொண்டிருந்த வேளை…இவர்கள் ( இலங்கை இராணுவம் ) எங்கள் கடவுள்கள் என்ற பாடலுக்கு இசையமைத்தவர் இந்த இராஜ் வீரறட்ணே (Iraj Weeraratne)
இவருடன் சேர்ந்து கைகோர்த்து நிக்கிறது வேட்டைக்காரன் யுனிட்! இன்னும் சில பாடல்களை விஜய் அன்ரனி இவருடன் சேர்ந்து பணியாற்ற உள்ளாரம். எதுவும் செய்யுங்கள் எங்களிடம் வராதீர்கள். வந்தால் புறக்கணிப்போம்