Timeline

Timeline

2020
April 9

Corona ஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.

பெடரல் கவுன்சில் 2020 ஏப்ரல் 26 வரை நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறது. எல்லோரும் தொடர்ந்து பெடரல் கவுன்சிலின் பரிந்துரைகளை பின்பற்றுவது அவசியம், மேலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி வீட்டிலேயே இருக்க வேண்டும். இதனால் நாம் புதிய வைரஸின் பரவலை சேர்ந்து தடுப்போம். Source :https://www.bag.admin.ch/bag/fr/home/krankheiten/ausbrueche-epidemien-pandemien/aktuelle-ausbrueche-epidemien/novel-cov/massnahmen-des-bundes.html
April 8

Gotthard குகை மூடப்படமாட்டாது. இறுப்பினும் திச்சினோவின் நிலையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது காவல்துறை.

உயிர்த்த ஞாயிரை முன்னிட்டு பலர் விடுமுறைக்கு திச்சினோ மாநிலத்திற்கு வர உள்ளனர். ஊரி மற்றும் திச்சினோவின் மாநில காவல்துறையினர் இதனை தடுப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள கைகோர்த்துள்ளனர் னர். Göschenenனில் சோதனைச் சாவடி ஒன்றினை அமைக்க உள்ளனர். இதன் மூலம் வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை குறைக்கலாம் என்பதே காவல்துறையின் நோக்கம் ஆகும். இந்த நடவடிக்கை சரக்குகளின் போக்குவரத்தினையும் திச்சினோ மற்றும் இத்தாலியில் வாழும் மக்களையும் பாதிக்காது. பிற பயணிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரம் ஒன்றினை பெறுவர். அதன் பின்னர் பயணத்தை தொடர்வதை..Read More
April 3

லுகானோ மாநிலத்தில் முக்கியமான பொது இடங்கல் இன்று முதல் மூடப்படுகின்றன

இன்று லுகானோ நகராட்சி பொது மக்கள் சந்திப்பதை தடை செய்யும் நோக்கத்தில் சில பொது இடங்களை மூட முடிவெடுத்துள்ளது. பின் வரும் இடங்கள் பொதுமக்களின் பாவனைக்கு தடை செய்யப்பட்டுள்ளன: Piazza Bossiக்கும் Villa Castagnola வுக்கும் ஏரிக்கும் இடையே இருக்கும் பரப்பளவு; Lanchetta பகுதியில் உள்ளக் ஏரிக்கரை; Via Rivieraவில் இருக்கைகள் இருக்கும் பகுதி; Caronaவில் உள்ள Chiesa di Santa Maria d’Ongero போகும் வழியும் அங்கு உள்ள வாகன தரிப்பிடம். இந்த முடிவு பலர் ஒரு இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்க..Read More
April 3

கொரோனா வைரஸ் – இத்தாலி எல்லை தாண்டிய போக்குவரத்துப் பயண தரிப்பிடம் பற்றிய விபரம்

TILO வலைத்தளத்தின் புகையிரதங்களுக்க் திச்சினோ மாநிலத்தில் கடைசி தரிப்பிடம். மூன்று யூரோசிட்டி இணைப்புகளை சார்ந்த இந்த நடவடிக்கை, இத்தாலிய அதிகாரிகள் விடுத்துள்ள உத்தரவைப் பின்பற்றுகிறது. கியாசோ – இன்று முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை, இத்தாலிக்குச் செல்லும் எல்லை தாண்டிய ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இத்தாலிய போக்குவரத்து மற்றும் சுகாதார அமைச்சர்களால் மார்ச் 28 சனிக்கிழமையன்று விடுக்கப்பட்ட கட்டளைச் சட்ட திற்கிணங்க, இத்தாலிய எல்லைக்குள் நுழைவதற்கான நடைமுறைகளை SBB ஒழுங்குபடுத்துகிறது. இந்த ஏற்பாட்டால் பொருள் போக்குவரத்து பாதிக்கப்படாது. TILO வலைத்தளத்தின் ரயில்கள் இன்றோடு..Read More
März 27

திசினோவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 76

திசினோவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 76
திசினோவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 76 கடந்த 24மணித்தியாலத்தில் 287 பெயர்களுக்கு இந்த நோய் பரவியுள்ளது. மொத்தமாக மாநிலத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1688 ஆகும்.
März 25

பெற்றோர், சிறுவர் மற்றும் இளையோருக்குரிய ஆதரவு.

* சிறுவர் மற்றும் 25 வயது வரை உள்ள இளையோருக்குரிய ஆதரவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 147* உ‌‌ளவியல் சார்ந்த எவ்விதமான கேள்விகள், சந்தேகங்கள் அல்லது சிக்கல்கள் இருப்பின், இந்த தொலைபேசி எண்ணுக்கு 24h/24h மணிநேரமும் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம். ரகசியம் பேணப்பட்டும். மேலதிக விபரங்களை இவ் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் : www.147.ch. இன்று, கொரொனா வைரஸினால், நாம் அனைவரும் கட்டாயமாக வீட்டில் இருக்கவேண்டும். இச் சுழலில், குடும்பங்களின் மத்தியில் பிரச்சனைகள் வருவதுண்டு. அந்தவகையில், இத் தொடர்பு மையம் துறைசார்..Read More
März 23

Corona உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2வது இடம்பிடித்த சுவிட்சர்லாந்து

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்லும் இத்தாலியும் நியூயார்க்கும் உலகின் கவனம் ஈர்த்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்து உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடம் பிடித்தது ஆச்சரியத்துக்குரிய விடயம்தான். ஒரு காலத்தில் நேரம் பார்ப்பதற்கு கைக்கடிகாரங்களைப் பார்க்கவேண்டாம், சுவிஸ் ரயில்கள் வரும் நேரத்தைப் பார்த்தால் போதும் என்பார்கள். அப்படி நேரம் தவறாமை முதலான பல விடயங்களில் உலகை ஆச்சரியப்படுத்திய சுவிட்சர்லாந்து, இன்று உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடம் பிடித்தது எப்படி என்ற கேள்வி..Read More
März 23

திசினோ – 48 பேர் உயிரிழந்துள்ளனர்

மொத்தமாக 1165 பேருக்கு திசினோ மாநிலத்தில் இந் நோய் பரவியுள்ளது மற்றும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். source: ti.ch
März 21

சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கான சோதனை கருவிகள் பற்றாக்குறை! எச்சரிக்கும் அதிகாரிகள்

சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கான சோதனை கருவிகள் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகளின் பற்றாக்குறையை நாடு எதிர்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக சுவிட்சர்லாந்தில், தற்போது வரை 6,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, மக்கள் வீட்டிற்குள்ளே இருக்கும் படியும், அவசியமற்ற பயணங்களை தவிர்க்கும் படியும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸிற்கான சோதனைகளின் பற்றாக்குறையை நாடு எதிர்கொள்வதாக அந்நாட்டு அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை எச்சரித்துள்ளனர். மேலும் தெற்கு டிசினோ பிராந்தியத்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள் (ICU)..Read More
März 21

திசினோ: 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

திசினோ மாநிலத்தில் 84 பேருக்கு இத் நோய் மேலும் பரவியுள்ளது மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 918 பேருக்கு திசினோ மாநிலத்தில் இந் நோய் பரவியுள்ளது மற்றும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந் நோயானது ஒவ்வொரு 100’000 பேரில் 257.8 பேருக்கு இந்த மாநிலத்தில் பரவியுள்ளது. மற்றைய மாநிலங்களிடன் ஒப்பிடையில் திசினோவில் பரவிய எண்ணிக்கை அதிகமாக உள்ளது. source: tio.ch