திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட சிறை; கருணாவுக்கு அமைச்சர் பதவியா?: ஊடக அமைச்சரிடம் ஊடகவியலாளர் கேள்வி
- tyo
- கருத்துகள் இல்லை
திஸ்ஸநாயகம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்தார் என 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கருணாவிற்கு அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதே என்று நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிடம் செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் குறித்து ஊடக அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவத்தின் கொடூரச்செயல்:அமெரிக்கா கண்டனம்
- tyo
- கருத்துகள் இல்லை
இலங்கை தமிழர்களின் கைகளையும் கண்களையும் கட்டி, நிர்வாணமாக்கி சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகளை இங்கிலாந்து டி.வி. சமீபத்தில் வெளியிட்டது.
இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய தலைவருமான சூசன் ரைஸ் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.
அப்போது அவர், ‘தமிழர்களை சுட்டுக் கொன்றதாக வெளியான படக்காட்சிகள் மிகவும் துயரமளிப்பவையாக உள்ளன. அவை மிகவும் கண்டனத்துக்குரியவை.
அமெரிக்காவின் சொந்த தேசிய பொறுப்புணர்வின் அடிப்படையில் இது தொடர்பாக மேலும் பல தகவல்களை நாங்கள் திரட்டுவோம் என்றார்.
சமாதான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பான் கீ மூன் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு
- tyo
- கருத்துகள் இல்லை
சமாதான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் நோர்வேக்கு விஜயத்தை மேற்கொண்ட பான் கீ மூன் வடக்கு தமிழ் மக்களுடன் சமாதான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். இந்த சமாதானத் திட்டம் நோர்வேயின் மற்றுமொரு சூழ்ச்சி என நினைத்த அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் சமாதான உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia